அடையாளத்தின் சத்தம் The voice of the sign 64-0313 1.நாம் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளாதபடிக்கு, இன்றிரவு நேராக வார்த்தைக்குச் செல்வோமாக. இன்றிரவு நீங்கள் யாத்திராகமப் புத்தகத்திற்கு, யாத்திராகமப் புத்தகம் 4-ம் அதிகாரம் தொடங்கி, என்னோடு திருப்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்பொழுது மோசே: அவர்கள் என்னை நம்பார்கள்; என் வாக்குக்குச் செவிகொடார்கள்; கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள் என்றான். கர்த்தர் அவனை நோக்கி: உன் கையிலிருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான். அதைத் தரையிலே போடு என்றார்; அவன் அதைத் தரையிலே போட்டபோது, அது சர்ப்பமாயிற்று; மோசே அதற்கு விலகி ஓடினான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: உன் கையை நீட்டி, அதின் வாலைப் பிடி என்றார்; அவன் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தபோது, அது அவன் கையிலே கோலாயிற்று. ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குத் தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார். மேலும், கர்த்தர் அவனை நோக்கி: உன் கையை உன் மடியிலே போடு என்றார்; அவன் தன் கையைத் தன் மடியிலே போட்டு, அதை வெளியே எடுக்கும்போது, இதோ, அவன் கை உறைந்த மழையைப்போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது. அவர்: உன் கையைத் திரும்பவும் உன் மடியிலே போடு என்றார். அவன் தன் கையைத் திரும்பத் தன் மடியிலே போட்டு, தன் மடியிலிருந்து அதை வெளியே எடுத்தபோது, அது திரும்ப அவனுடைய மற்றச் சதையைப்போலாயிற்று. அப்பொழுது அவர்: முந்தின அடையாளத்தை அவர்கள் கண்டு, உன்னை நம்பாமலும் உனக்குச் செவிகொடாமலும் போனால், பிந்தின அடையாளத்தைக் கண்டு நம்புவார்கள். 2 நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. நம்முடைய தலைகள் வணங்கியிருப்பதோடு, நம்முடைய இருதயங்களும் கூட, இன்றிரவு இங்கே ஜெபத்திற்கான வேண்டுகோள்களை உடையவர்களாயிருக்கிறார்களா என்று நான் எதிர்பார்க்கிறேன்? நம்முடைய கரங்களை உயர்த்தும்போது, நீங்கள் அதைத் தெரியப்படுத்துங்கள். தேவன் உங்களுடைய விண்ணப்பங்களை அருளுவார். 3 எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் இதை இப்படிப்பட்ட ஒரு சிலாக்கியமாகக் கருதி உம்மிடம் ஜெபத்தில் வர, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் வருகிறோம். அவருடைய நாமத்தில் நாங்கள் எதைக் கேட்டாலும், அது அருளப்படும் என்று அவர் மூலமாய் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிறோம். எங்கள் ஒவ்வொருவருடைய தேவையையும் நீர் அறிந்திருக்கிறீர். எங்களுடைய கரங்கள் மேலே உயர்த்தப்பட்டபோது, அவை எதைக் குறிக்கின்றன என்பதை நீர் அறிவீர். பிதாவே, நீர் இன்றிரவு ஒவ்வொரு வேண்டுகோளுக்கும் பதிலளிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். மகிமையைப் எடுத்துக்கொள்ளும். 4 இப்பொழுது வார்த்தையின் மகத்தான போதகர், பரிசுத்த ஆவியானவர் இன்றிரவு எங்கள்மேல் வந்து, தம்மை எங்களுக்கு வெளிப்படுத்துவராக. மேலும்—மேலும் தம்முடைய உயிர்த்தெழுதலின் அத்தாட்சியின் மூலம் தம்மை எங்களுக்குத் தெரியப்படுத்துவராக. கர்த்தாவே, இன்றிரவு, அவர் எங்கள் மத்தியில் வந்து, எங்கள் இருதயங்களை விசாரிப்பாராக. இந்நாளுக்காக அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிற காரியங்களின் மூலமாக எங்களிடத்தில் பேசும். எல்லா ஜனங்களையும் சோதிப்பதற்காகப் பூமியின் மேல் வரும் என்று நீர் கூறின இந்தப் பெரிதான தொல்லையுடைய நேரத்தில், இந்த வேளைக்காக வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிற வார்த்தைகள் எங்களுக்கு முன்பாக வெளிப்பட்டு, இதனால் நாங்கள் உறுதியாக இருக்க முடியும். பிதாவே, மனிதன் சோதிக்கப்படும் அந்த நேரம் நிச்சயமாகவே வந்துள்ளது. அங்கே அநேக வித்தியாசமான கோணங்களில், ஒருவரும் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாத அளவிற்கு உள்ளனர். ஆனால், கர்த்தாவே, நீர் இங்கே இருக்கிறீர் என்றும், எங்களுக்கு உதவி செய்ய எங்களோடு இருக்கிறீர் என்பதையும், இன்றிரவு நீர் எங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். எங்களுடைய விண்ணப்பங்களை அருளும், ஏனென்றால் நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். உட்காருங்கள். 5 நான் ஒவ்வொரு இரவும் சற்று தாமதமாக வந்திருக்கிறேன். நான் இந்த ஒலிப்பெருக்கியைக் குறித்து தொடர்ந்து நினைத்துப் பார்க்கிறேன், ஆனால் ஒலிப்பதிவு கருவிகளுக்கு இது ஒன்றுண்டு. ஆனால் இங்குள்ள இது, நான் கேட்க வேண்டிய அல்லது பேச வேண்டிய ஒன்றாயுள்ளது என்று நான் நினைக்கிறேன். 6 நாளை இரவு விருந்து இரவாக இருக்கிறது, எனவே அதை மறந்துவிடாதீர்கள். நான் நினைக்கிறேன்…ஜனங்கள் எங்குச் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்று நான் யூகிக்கிறேன். 7 நம்முடைய கர்த்தர் செய்திருக்கிற மகத்தான காரியங்களில் உங்களுடைய ஒத்துழைப்பை நாங்கள் நிச்சயமாகவே பாராட்டுகிறோம். 8 இப்பொழுது, இன்றிரவு, நாம் தேவனுடைய வார்த்தையை அறிந்திருந்தாலொழிய, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையே அறியோம் என்று நான் நினைக்கிறேன். தேவனுடைய சித்தம் என்னவென்பதை நாம் அறிந்துகொள்ளும் வரையில் நாம் விசுவாசங்கொண்டிருக்க முடியாது. மேலும், என்ன, அப்படியானால் அது தேவனுடைய சித்தமாயுள்ளது என்றும், தேவனுடைய வார்த்தை ஏதோ ஒரு காரியத்தைக் கூறுகிறது என்றும் நாம் அறிந்திருந்தால், அப்பொழுது நாம் அதை மகிழ்ச்சியோடு பின்பற்ற முடியும். 9 இப்பொழுது கர்த்தராகிய இயேசு, இன்றிரவு பூமியில், மாம்ச சரீரத்தில், தனிப்பட்ட, முறையில் சுற்றி நடந்து கொண்டிருந்தால், அவர், “நாளை நாள் முழுவதும் மழை பெய்யும்” என்று கூறினால், இப்பொழுது நான் காலையில் புறப்படும்போது ஒரு குடையை எடுத்துக்கொள்வது எனக்கு மிகவும் சுலபமாயிருக்கும், ஏனென்றால் அவர் அதைக் கூறினார். இப்பொழுது, அவர் அதைக் கூறவில்லையென்றால், அப்பொழுது எதை நோக்கிப் பார்க்க வேண்டும் என்று எனக்குத் தெரியாது. எனவே அந்தவிதமாகவே அது உள்ளது, நாம் செய்கிற எந்தக் காரியத்திலும், நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற காலத்தையும், நேரத்தையும் நாம் அறிந்துகொள்ள விரும்புகிறோம். 10 துவக்கத்திலிருந்தே, தேவன் முடிவை அறிந்திருந்தார் என்பதை இந்த வாரம் புதியதாக வருபவர்களுக்கு நாம் காண்பிக்க முயற்சித்தோம். அதுவே அவரை எல்லையற்றவராக்குகிறது. அவர் முடிவற்றவராக, முடிவற்றவராக இல்லையென்றால், அவர் தேவனல்ல. அவர் சர்வ வல்லமையுள்ளவராக, சர்வ வியாபியாக, சர்வ வல்லமையுள்ளவராக, சர்வ வல்லமை படைத்தவராக இருக்க வேண்டும். அந்த எல்லா வல்லமையும், எல்லாக் காரியங்களையும் அறிந்திருக்கிறார் எல்லா இடங்களிலும் இருக்கிறார், மேலும்—மேலும்—மேலும் ஆதியிலிருந்து முடிவு வரையிலும் அறிந்திருக்கிறார். அவர் அவ்வாறு இல்லையென்றால், அப்பொழுது அவர் தேவன் அல்ல. 11 எனவே உண்மையாகவே நடக்காதது எதுவுமில்லை. அது நாம் தான். ஆனால் தேவனுடைய வார்த்தையில் ஒன்றுமே இல்லை; அது ஒரு கடிகாரத்தைப் போலத் துடித்துக் கொண்டிருக்கிறது. அது சம்பவிப்பதற்கான அந்த நேரம் வரும்போது, அந்தக் காலத்திற்காக ஒதுக்கப்பட்ட வார்த்தை, அது சம்பவிக்கிறது. அது நடக்கப்போவதில்லை…என்று நாம் நினைக்கலாம். சில நேரங்களில் அது சம்பவிக்கிறது, நாம் அதை அறியாமலிருக்கிறோம். ஒரு சமயம், இயேசு கூறினார்… 12 அவர்கள் அவரிடத்தில், “‘எலியா முதலில் வர வேண்டும்’ என்று வேதபாரகர் எல்லாரும்…ஏன் சொல்லுகிறார்கள்?” என்று கேட்டனர். பாருங்கள், இப்பொழுது, அவர்கள் அதை விசுவாசித்தனர். எலியா வரப்போகிறான் என்று அவர்கள் விசுவாசித்தனர். 13 இயேசு அவர்களைப் பார்த்து, “எலியா ஏற்கனவே வந்தாயிற்று, நீங்கள் அவனை அறியவில்லை” என்றார். பார்த்தீர்களா? இப்பொழுது, பாருங்கள், அது வேதபாரகர்கள், போதகர்கள், சீஷர்கள் போன்றவர்களைக் கடந்து சென்றது. அது யோவான் ஸ்நானன், எலியா வரவேண்டிய ஒவ்வொரு விதத்திலும் அவன் வந்தான், ஆயினும் அவர்கள் அவனை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. 14 இப்பொழுது நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற வேளையையும், நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற நேரத்தையும் நாம் அடையாளங்கண்டு கொள்ள வேண்டியதாய் உள்ளது. அதன் பேரில், அடையாளத்தின் சத்தம் என்பதைக் குறித்து நான் இன்றிரவு பேச விரும்புகிறேன். 15 ஒரு விசித்திரமான உரை, அதே சமயத்தில் தேவன் வழக்கத்திற்கு மாறான வழிகளில் விசித்திரமான காரியங்களைச் செய்கிறார். அதுதான் அவரைத் தேவனாக்குகிறது, ஏனென்றால் அவர்—அவர் இயற்கைக்கு மேம்பட்டவராயிருக்கிறார். அவர் செய்கிற ஒவ்வொரு காரியத்தையும், அவர்—அவர் அதைச் செய்கிறார், அவரால் இயற்கைக்கு மேம்பட்ட முறையில் அதைச் செய்ய முடியும், ஏனென்றால் அவர் இயற்கைக்கு மேம்பட்டவர். 16 இப்பொழுது, அடையாளத்தின் சத்தம். அது ஒரு…அங்கு அடையாளத்திற்கு ஒரு சத்தம் உண்டு. இரத்தத்திற்கு ஒரு சத்தம் உண்டு. பூமியிலிருந்து இரத்தம் பேசியது, மேலும்—மற்றும் பல, “ஆபேலின் நீதியான இரத்தம் காயீனுக்கு எதிராகப் பேசியது.” வேதம், “ஆபேலின் இரத்தத்தைப் பார்க்கிலும் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மகத்தானவைகளைப் பேசினது” என்று கூறியுள்ளது. 17 இப்பொழுது இன்றிரவு நம்முடைய நிலை, இல்லை நம்முடைய காட்சி யாத்திராகமத்தில் துவங்குகிறது. யாத்திராகமத்தின் நேரமானது அழைக்கும் நேரமாய் உள்ளது, யாத்திராகமம் சமீபமாயிருந்தது. 18 மோசே, கர்த்தருடைய ஊழியக்காரன், ஒரு—ஒரு கடமையின் பாதைக்கு அழைக்கப்பட்டிருந்தான். அவன் நினைத்ததைச் செய்து, அவன் எகிப்தில் உயர் கல்வி கற்றவனாய், எகிப்தியருடைய எல்லா ஞானத்தையும் கற்றறிந்தவனாயிருந்தான், அவன் ஒரு—ஒரு வகையில், ஒரு பெரிய இராணுவ மேதையாயாக இருந்து, அவனால் தன்னுடைய ஜனங்களை அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க முடியும் என்று தோன்றினது, ஏனென்றால் அவன் அடுத்து வரப்போகும் பார்வோனாயிருந்தான். அவன் அதைச் செய்திருந்தால் எவ்வளவு சுலபமாக இருந்திருக்கும். ஆனால், நீங்கள் பாருங்கள், அப்படி இருந்திருந்தால், அப்பொழுது அது ஒரு இயற்கையான காரியமாக இருந்திருக்கும். 19 தேவன் இயற்கையான காரியங்களை எடுத்துக்கொள்வதில்லை. அவர் தம்மை நிரூபிக்க இயற்கைக்கு மேம்பட்ட காரியங்களை எடுத்துக் கொள்கிறார். 20 எனவே நாற்பது ஆண்டு கால கல்வியில், அவன் பெறக்கூடிய மிக உயர்ந்த கல்வியிலும், அவன் பெறக்கூடிய மிகச் சிறந்த கல்வியிலும், அவன் சிறந்த புலமை வாய்ந்த மேதையாக இருக்க முடியும்; அவனுடைய தாயாரிடத்திலிருந்தும், அவனுடைய ஆசிரியரிடமிருந்தும், அவன் தான் ஜனங்களை விடுவிக்க வேண்டும் என்றும், அவன் தன்னுடைய அறிவின் வல்லமையைக் கொண்டு, ஒரு எகிப்தியனைக் கொன்றான். அதிலிருந்து, அவனுடைய முயற்சிகள் தோல்வியடைந்தை கண்டறிந்து, அதன்பின்னர் வனாந்தரத்திற்கு ஓடினான். 21 எகிப்து, நாற்பது ஆண்டுகளில் அவனுக்குள் கல்வி கற்பித்ததை, அவனிடத்திலிருந்து அதை வெளியே எடுக்கத் தேவனுக்கு மற்றொரு நாற்பது ஆண்டுகள் பிடித்தன, பாருங்கள், எனவே அவன் கல்வியின் நெறிமுறைகளில் நம்பிக்கை கொள்ளமாட்டான். அவன் இயற்கைக்கு மேம்பட்டவைகளில் நம்பிக்கை கொள்வான். 22 இப்பொழுது தேவன் ஆபிரகாமுக்கு ஒரு வாக்குத்தத்தம் செய்திருந்த நேரம் சமீபமாயிருந்தது, அந்தக் காலத்திற்கு நானூறு ஆண்டுகளுக்கு முன்பே, அவனுடைய சந்ததியார் அந்நிய தேசத்தில் சஞ்சரிப்பார்கள் என்றும், அவர்கள் வெளியே கொண்டு வரப்படுவார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் ஒரு பலத்த கரத்தோடு வெளியே கொண்டு வரப்படுவார்கள். அவர் தன்னுடைய ஜனங்களை ஒரு பலத்த கரத்தினால் விடுவிப்பார். வாக்குத்தத்தத்தின் நேரம் நெருங்கினபோது, அப்பொழுதுதான் தேவன் மோசேயை காட்சியில் வைத்தார். மோசே தன்னுடைய முற்றிலுமான தோல்வியில் வனாந்திரத்திற்குள்ளாகச் சென்றிருந்தான். 23 இப்பொழுது இங்குள்ள மாதிரி, நாம் நிச்சயமாகத் தவறவிட விரும்பாத ஒரு அற்புதமான மாதிரி உண்டு. பார்த்தீர்களா? மாதிரியாகத் தேவன் இஸ்ரவேலை, தம்முடைய ஜனங்களை, ஒரு தேசத்திலிருந்து, ஒரு தேசத்தை ஒரு தேசத்திலிருந்து வெளியே கொண்டு வந்தார். ஒரு தேசத்திலிருந்து ஒரு தேசம், இன்றைக்கு ஒரு அழகான மாதிரி, அதாவது தேவன் ஒரு சபையிலிருந்து தம்முடைய மணவாட்டியை அழைத்துக் கொண்டிருக்கிறார், ஒரு கிறிஸ்தவ சபையிலிருந்து ஒரு கிறிஸ்தவ மணவாட்டி, ஒரு சபையிலிருந்து ஒரு மணவாட்டி சபை என்று அழைக்கப்படுகிறாள், அது வேதத்தில், குறிப்பிடப்படுகிறது. 24 இன்றிரவு இந்தப் பாடத்தின் பேரிலான அநேக குறிப்புகளையும், வேதவாக்கியங்களையும் நான் இங்கே எழுதி வைத்துள்ளேன். 25 அது சில சமயங்களில், “தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அல்லது ஸ்திரீயினுடைய வித்தின் மீதியானவர்கள்” என்று அழைக்கப்படுகிறது. அது, “மணவாட்டி” என்று அழைக்கப்பட்டது, தேவன் தம்முடைய முன்னறிவினால் என்னவாக இருக்க வேண்டும் என்று நியமித்தார். அதாவது, சபையிலிருந்து மணவாட்டி வெளியே வருகிறாள். பாருங்கள், முழு காரியமும் ஒரு சபையாகவே உள்ளது, ஆனால் தேவன் அந்தச் சபையிலிருந்து ஒரு ஜனத்தை ஒரு மணவாட்டியாக எடுத்துக் கொள்கிறார். அவர் செய்வதாகக் கூறினார். அவர் அதைச் செய்தார், கவனியுங்கள், இல்லையென்றால் அவர் அதைச் செய்வார். 26 கவனியுங்கள், அவர் அதை எப்படி செய்தார் என்றும், அந்தப் பாணியையும், அவர் அதை எப்படி செய்தார் என்பதையும் பாருங்கள். அவர் இஸ்ரவேலரை வெளியே கொண்டு வந்தபோது, அவர் அதை எப்படிச் செய்தார் என்றும், அவர்—அவர் அதைச் செய்த விதத்திலும் நாம் இப்பொழுது இதைக் காண விரும்புகிறோம். 27 கவனியுங்கள், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையின் காலம் நிறைவேறும்போது, தேவன் மோசேயை முன்குறித்தலின் மூலம் அழைத்து, அந்த ஊழியத்திற்கு அவனைத் தெரிந்துகொண்டார். பார்த்தீர்களா? தேவன் எப்பொழுதுமே குறிப்பிட்ட நபரை அந்த நேரத்தில் வைத்திருக்கிறார். தேவனிடத்தில் ஒன்றும் தவறிப்போவதில்லை. அவர் அதைக் கூறினார்; அது தவறிப்போக முடியாது. அது தவறினால், அப்பொழுது தேவன் தவறுகிறார், ஏனென்றால் தேவன் வார்த்தையாயிருக்கிறார். 28 கவனியுங்கள், இப்பொழுது, வார்த்தை வெளிப்படுத்தப்பட வேண்டியதாயிருந்தது. வார்த்தையானது ஒரு வாக்குத்தத்தத்தைக் குறித்து வெளிப்படுத்தப்பட வேண்டியதாயிருந்தபோது, அந்த வாக்குத்தத்தத்தை வெளிப்படுத்தத் தேவன் எப்பொழுதுமே ஒரு தீர்க்கதரிசியை அனுப்புகிறார், ஏனென்றால் கர்த்தருடைய வார்த்தை அவனிடத்தில் வருகிறது. 29 அந்த நோக்கத்திற்காக முன்குறிக்கப்பட்டிருந்த மோசே அந்தப் வேலைக்காக அழைக்கப்பட்டான். வேறு எவரும் அதைச் செய்ய முடியாது. 30 தேவன் ஒரு நபரை ஒரு வேலையைச் செய்யும்படி அழைத்திருக்கும்போது, எவருமே அதனுடைய ஸ்தானத்தை எடுக்க முடியாது. உங்களுடைய விசேஷ குணத்தை, உங்களுடைய ஸ்தானத்தை எவருமே எடுத்துக்கொள்ள முடியாது. 31 ஓரல் ராபர்ட்ஸின் இடத்தை நான் எப்படிப் பிடிக்க விரும்புகிறேன் என்று நான் எத்தனை முறை யோசித்திருக்கிறேன், பில்லி கிரஹாமின் ஸ்தானத்தை நான் எப்படி எடுத்துக் கொள்ள விரும்புகிறேன், அது போன்ற ஒருவர். பில்லி கிரஹாமைப் போல, போய் ஜனக்கூட்டத்தில் பேசி, பாவிகளைப் பீடத்திற்கு அழைத்து; அதை மறந்துவிட்டு வீட்டிற்குச் சென்றுவிடுகிறார், அங்கே நின்று கொண்டு மீண்டும் போராட வேண்டியதில்லை. நான் பில்லி கிரஹாமாக இருக்க முடியாது, ஆனால் பில்லி கிரஹாம் என்னைப் போல் இருக்க முடியாது. நாம் இருவரும்…நான் ஓரல் ராபர்ட்ஸாக இருக்க முடியாது; ஓரல் ராபர்ட்ஸ் என்னைப் போல் இருக்க முடியாது. 32 நீங்கள் ஒவ்வொருவரும் தேவனுடைய பொருளாட்சியில் அதனுடைய ஸ்தானத்திற்கேற்றவாறு அமைக்கப்பட்டுள்ளீர்கள். ஒருவன் எல்லா நேரத்திலும் உபவாசித்து தேவனோடு ஐக்கியங்கொள்கிறான், மற்றொருவன் இந்த ஒருவனின் உபவாசிப்பினால் பிசாசுகளைத் துரத்துகிறான். ஆனால் அது கிறிஸ்துவின் முழு சரீரமும் ஒன்றாகச் ஒற்றுமையுடன் செயல்படுவதாகும். இந்த ஸ்தாபன தடைகள் நம்மை உடைப்பதை நாம் காணும்போது, அதுவே என் இருதயத்தை புண்படுத்துகிறது, பாருங்கள், ஏனென்றால் அதுவே நம்மைப் பிரிக்கிறது. நாம் ஒன்றாயிருக்கிறோம். 33 நமக்கு மத்தியில் பெரிய ஜனங்கள் இல்லை, நமக்கு மத்தியில் எந்த மகத்தான ஜனங்களும் இல்லை. நாம் யாவரும் ஒன்றே. நாம் தேவனுடைய பிள்ளைகள். நமக்கு மத்தியில் ஒரே ஒரு மகத்தானவர் மாத்திரமே உண்டு, அவர்தான் கிறிஸ்து. நாம் அவரை அடையாளங்கண்டு கொள்ள வேண்டும். நாம் ஒருவருக்கொருவர் கனத்தை தேடுவோமானால், நாம் விசுவாசத்தை உடையவர்களாயிருக்க முடியாது, ஏனென்றால் நாம் ஒருவர் மேல் ஒருவர் விசுவாசம் கொண்டிருக்கிறோம். நாம் கிறிஸ்துவில் விசுவாசம் கொண்டிருக்க வேண்டும். நமக்கு மத்தியில் உள்ள ஒருவரான அவரில் தான் நாம் விசுவாசம் கொண்டிருக்க வேண்டும், அதன்பின்னர் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதையும், நமக்கு அளித்திருக்கிறதையும் விசுவாசிக்க வேண்டும். 34 இப்பொழுது, மோசேயின் ஸ்தானத்தை எவருமே எடுக்க முடியாது. அவன் எவ்வளவுதான் ஓடினாலும், அவன் எவ்வளவுதான் அதிலிருந்து விலகிச் செல்ல முயன்றாலும், அதே சமயத்தில் தேவன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை அவர் அறிந்திருக்கிறார். மோசேயிடமிருந்து அவர் என்ன எடுக்க வேண்டும் என்பதையும், என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். இந்தக் காரியங்கள் சம்பவிக்க வேண்டியதாயிருந்தது. இப்பொழுது, கவனியுங்கள், ஒருவரும் அவனுடைய ஸ்தானத்தை எடுக்க முடியாது. 35 இப்பொழுது கவனியுங்கள். அவன் எகிப்துக்குச் சென்றபோது, அவனுடைய அழைப்பையும் உரிமை கோருதலையும் நிரூபிக்கத் தேவன் அவனுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். 36 இப்பொழுது, தேவன் எப்பொழுதுமே ஒரு செய்தியாளனுக்கு ஒரு அடையாளத்தையும், அந்த அடையாளத்தின் சத்தத்தையும் அளிக்கிறார். அந்த அடையாளம் வேதத்தில் எழுதப்பட்டிருந்தால், அது மனிதனை அடையாளங்காட்டுகிறது. 37 யோவான், “நான் வனாந்திரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன்” என்று கூறினது போல. அவர்கள், “நீர் தான் மேசியாவா?” என்று கேட்டனர். 38 அவன், “நான் மேசியா அல்ல. ஏசாயா தீர்க்கதரிசி கூறினதுபோல, நானோ வனாந்திரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன்” என்றான். அவனால் தன்னை தெளிவாக அடையாளங்காட்ட முடிந்தது. 39 இப்பொழுது, அதன்பின்னர், அதில், தேவன், எப்பொழுதும், எந்தக் காரியத்தையும் தம்முடைய வழியை ஒருபோதும் மாற்றிக்கொள்ளவில்லை என்பதை நாம் கண்டறிகிறோம். அவரால் மாற முடியாது. தேவன் ஒவ்வொரு காரியத்தையும் சரியாக அதேவிதமாகவே செய்கிறார், அவர்—அவர் தம்முடைய முறைமையை ஒன்று சேர்த்து அமைக்கிறார். 40 அன்றொரு இரவு நான் கூறினதுபோல, குற்றமற்ற ஒருவருடைய சிந்தப்பட்ட இரத்தத்தினால் மனிதன் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற ஒரு தீர்மானத்தை அவர் செய்தார். மனிதன் இரட்சிக்கப்படுவதற்கு நாம் எல்லாவற்றையும் முயற்சித்துள்ளோம். நேபுகாத்நேச்சார் கட்டிய ஒரு நகரத்திற்கு நாம் அவனைக் கொண்டு செல்ல முயன்றோம். அவர்கள் ஒரு கோபுரத்தைக் கட்டினார்கள், நிம்ரோது கட்டினான். அவர்கள் ஒரு பிரமாணத்தை உடையவர்களாயிருந்தனர். அவர்களுக்கு ஆலயங்கள் இருந்தன. அவர்களுக்குச் சபைகள் இருந்தன. அவர்களுக்கு ஸ்தாபனங்கள் இருந்தன. அவர்கள் கல்வி முறைகளையும், ஸ்தாபன முறைமைகளையும் உடையவர்களாயிருந்து, மனிதனை தேவனண்டைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர். அது, ஒவ்வொன்றும் தவறிவிட்டது. அது எப்பொழுதுமே தோல்வியடையும். அது சிந்தப்பட்ட இரத்தத்திற்கு திரும்ப வருகிறது! 41 தேவன், அவர் வழியில் செய்கிற எந்தக் காரியமும் அவருடைய வார்த்தையில் உரைக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தை இயேசு கிறிஸ்துவின் முழு வெளிப்பாடாய் உள்ளது, அதனோடு ஒன்றும் கூட்டப்படவோ அல்லது அதிலிருந்து எடுத்துப் போடப்படவோ முடியாது. “அதைச் செய்கிற எவனும் அவனுடைய பங்கு ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்திலிருந்து எடுக்கப்படும்” என்று வேதம் கூறியுள்ளது. அவன் அதிலிருந்து எதையாவது கூட்டினாலோ அல்லது எதையாவது எடுத்துவிட்டாலோ. அது எழுதப்பட்டுள்ள விதமாகவே அதை எடுத்துக்கொள்ளுங்கள். 42 வேதாகமத்தை வியாக்கியானம் செய்ய எவருமே தேவையில்லை, தேவன் தம்முடைய சொந்த வியாக்கியானி. அவர் என்ன கூறுகிறாரோ அதை நிறைவேற்றுவதன் மூலம் அவர் அதற்கு அர்த்தம் உரைக்கிறார். அதுவே அதைத் தீர்த்து வைக்கிறது. தேவன் அதைக் கூறினாரானால், அவர் அதைச் செய்தாரானால், அவ்வளவுதான். அதற்கு அர்த்தம் உரைப்பவர் தேவையில்லை. வேதம், “அது சுயத் தோற்றமான பொருளையுடையதாயிராது” என்று கூறியுள்ளது. 43 அதைச் செய்யும் தேவனுடைய வழி! தம்முடைய அனுப்பப்பட்ட அடையாளத்திற்கு எப்பொழுதும் உண்மையாயிருந்து, அவர் தம்முடைய சத்தத்தைக் கொண்டு பின்பற்றினார்; தேவன் ஒரு அடையாளத்தைப் பூமிக்கு அனுப்புகிறார். வேதம், தேவன் “முதலாவதாகத் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்கு அதைக் காண்பிக்கும் வரைக்கும், இப்போது தேவன் ஒருபோதும் எதையும் செய்வதில்லை.” இப்பொழுது அது, நீங்கள்…அது தவறாயிருந்தால், மற்றவையும் தவறாகும், பாருங்கள். அவர் அதைக் காண்பிக்கும் வரையில் அவர் ஒரு போதும் அதைச் செய்கிறதில்லை. 44 அந்த ஞானதிருஷ்டிக்காரன், தீர்க்கதரிசி, அடையாளங்கண்டு கொள்ளப்பட வேண்டும், அவன் என்ன தீர்க்கதரிசனம் உரைக்கிறான் என்பதை நாம் எண்ணாகமம் 12:6-ல் கண்டறிகிறோம், அதாவது அவன் கூறுவது நிறைவேறுகிறது. அப்படியானால் அதை விசுவாசியுங்கள். ஆனால் அது நிறைவேறவில்லையென்றால், அப்பொழுது அதை விசுவாசிக்காதீர்கள். அது அதற்காகத்தான் இருக்க வேண்டும், அவருடைய…அவன் எவ்வளவுதான் கூறினாலும், அது நிறைவேறினாலும், என்னவாயிருந்தாலும் அது பொருட்டல்ல; அது வார்த்தையின்படியாயில்லையென்றால், அப்பொழுது அது இன்னமும் தவறாயுள்ளது. அது வார்த்தையோடு இருக்க வேண்டும். அது அவர்கள் ஜீவித்துக் கொண்டிருக்கிற நேரத்தின் அடையாளத்திற்குரிய வார்த்தையோடு ஒழுங்கில் அமைக்கப்பட வேண்டும். 45 இப்பொழுது, அவர் தம்முடைய ஜனங்களை ஒரு பலத்த கரத்தால் விடுவிக்கப் போகிறார் என்று, தேவனால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருந்தது. இப்பொழுது, இந்த வார்த்தையை, அவர் ஒரு ஆசாரியனை அழைக்கவில்லை, அவர் ஒரு ரபீயை அழைக்கவில்லை, அவர் ஒரு நிர்வாகியை அழைக்கவில்லை. அவர் மலையின் மேலிருந்த ஒரு மேய்ப்பனை, தன் வேலையை விரும்பாத முன்குறிக்கப்பட்ட தீதீர்க்கதரிசியாகப் பிறந்து, ஓடிப்போன ஒருவனை அழைத்தார். 46 ஜனங்கள் இதுவாகவோ, அதுவாகவோ அல்லது மற்றதாகவோ இருக்க விரும்புவதை நீங்கள் கேட்கும்போது, சற்று கவனியுங்கள், தேவன் அவர்களை ஒருபோதும் உபயோகிப்பதில்லை. மோசேயைப் பிடிக்கத் தேவன் அவனைத் தேட வேண்டியதாயிருந்தது. அவர் பவுலைப் பிடிக்கத், அவனைத் தேடிப் பிடிக்க வேண்டியதாயிருந்தது. அவர்…அது அதைச் செய்ய விரும்பாத மனிதனாகும், அவர்கள் அதைச் செய்ய விரும்புகிறதில்லை; அதன்பின்னர் தேவன் அந்த மனிதனை எடுத்துக்கொள்கிறார், அவன் அதைச் செய்யமாட்டான், எனவே அவர் தம்முடைய மகிமையை அதன் மூலம் காண்பிக்க முடியும். 47 இப்பொழுது கவனியுங்கள். ஒவ்வொரு—ஒவ்வொரு உண்மையான தேவனால் அனுப்பப்பட்ட அடையாளமும் ஒரு சத்தத்தினால் பின்தொடரப்படுகிறது. இப்பொழுது நீங்கள் இங்கே கவனியுங்கள், உரையானது…அடையாளமும் சத்தமுமாயிருக்கிறது. “முதல் அடையாளத்தின் சத்தத்தை அவர்கள் விசுவாசிக்கவில்லையென்றால், அப்பொழுது அவர்கள் இரண்டாம் அடையாளத்தின் சத்தத்தை விசுவாசிப்பார்கள்.” இப்பொழுது, அடையாளம் ஒரு சத்தத்தை உடையதாயுள்ளது. இப்பொழுது, உண்மையான தேவனால் அனுப்பப்பட்ட ஒவ்வொரு அடையாளமும் ஒரு சத்தத்தை உடையதாயிருக்கிறது, அந்த நாளுக்காகக் கொடுக்கப்பட்ட வார்த்தையின்படியே அந்தச் சத்தம் பேச வேண்டும். 48 அந்தச் சத்தம் வருகிறதென்றால், அதே பண்டைய அதே பழைய சத்தம்…நீங்கள் ஒரு அடையாளத்தைக் காண்பீர்கள், சரியாகக் கூறினால், அந்த மனிதன் செய்துகொண்டிருக்கிற அடையாளம் அதே பழைய பாரம்பரியமாய் இருந்தால், அப்பொழுது நீங்கள் அதைக் கூறலாம், “அது தேவனிடத்திலிருந்து வரவில்லை.” அது அதே பழைய பாரம்பரியத்தை அடையாளம் கண்டுகொண்டால். அது ஒருபோதும் வரவில்லை. அது ஒருபோதும் வரவில்லை. அது தேவனுடைய திட்டத்திற்கு எதிராக இருக்கும். 49 அது புதியதாய் இருக்க வேண்டும். அது ஜனங்கள் புரிந்துகொள்ள முடியாத ஒன்றாக இருக்க வேண்டும். அது…இல்லையென்றால் அது அனுப்பப்படாது. அது அதே பண்டைய வேத சாஸ்திரப் பள்ளியாக இருக்குமானால், அது அனுப்பப்பட வேண்டியதில்லை. அது வித்தியாசமான ஏதோ ஒன்றாய் இருக்க வேண்டும், அதே சமயத்தில் அது வார்த்தையில் அடையாளங்கண்டு கொள்ளப்பட வேண்டும், அதாவது அது அந்த நாளுக்கானதாயுள்ளது. பாருங்கள், தேவனுடைய வார்த்தையின் உறுதியான காரியங்கள், அது அப்படித்தான் இருக்க வேண்டும். அதில் எந்தவித தவறும் கிடையாது. அது சத்தியமாயிருக்க வேண்டும்; சத்தியமாகிய தேவனால் ரூபகாரப்படுத்தப்பட வேண்டும். அதைப் பேசுகிற மனிதன் தேவனிடத்திலிருந்து ஒரு ஞானதிருஷ்டிக்காரனாயிருக்க, தேவனால் ரூபகாரப்படுத்தப்பட வேண்டும், இல்லையென்றால் அது தவறாகும்; அவர்களுக்குக் கூடத்—அதைப் பரிந்துகொள்ளுகிறதும் கூட இல்லை, இல்லவே இல்லை, அவர்கள் அதைக் கூட விசுவாசிப்பதில்லை. 50 அடையாளங்கள் தேவனிடத்திலிருந்து வருகின்றன. பின் தொடரும் அடையாளம்…இல்லை, அந்த அடையாளத்தைப் பின்தொடரும் சத்தம் அந்தக் காலத்திற்கான வார்த்தையிலிருந்து பேசும் தேவனுடைய சத்தமாக இருக்க வேண்டும். உங்களுக்கு அது புரிகிறதா? 51 தேவன் அடையாளங்களைக் கொடுக்கிறார். அவர் எதற்காக அதைச் செய்கிறார்? எப்பொழுதுமே அடையாளங்களைத் தருகிறார்! அவர்கள் அந்த அடையாளங்களில் அவரை எதிர்நோக்கியிருப்பார்கள் என்று அவர் அவர்களிடம் கூறினார். தேவன் தம்முடைய ஜனங்களின் கவனத்தை கவர்ந்திழுக்க அடையாளங்களை அளிக்கிறார். இப்பொழுது நாம் இதை முழுவதுமாக ஆய்ந்து படிப்போம். பாருங்கள், ஜனங்களின் கவனத்தை கவரவே அடையாளங்கள் கொடுக்கப்படுகின்றன. ஏனென்றால் தேவனால் அனுப்பப்பட்ட ஒரு அடையாளம் கொடுக்கப்படும்போது, தேவன் பேச ஆயத்தமாயிருக்கிறார். அடையாளம் கொடுக்கப்படும்போது, தேவன் பேச ஆயத்தமாயிருக்கிறார். அது பரலோகத்திலிருந்து வருகிறதென்றால், அது தேவனிடத்திலிருந்து வருகிறது, தேவன் பேச ஆயத்தமாயிருக்கிறார், அவர் ஜனங்களின் கவனத்தை கவர முயற்சித்துக் கொண்டிருக்கிறார். 52 வார்த்தை அவருடைய தீர்க்கதரிசியினிடத்தில் வருகிறது. தீர்க்கதரிசியோ அவன் காண்பிக்கிற அடையாளத்தினால் அடையாளங்காட்டப்படுகிறான், அதன்பின்னர் அவன் வார்த்தையினிடத்தில் வருகிறான், அந்த வார்த்தை வெளிப்படுத்தப்படுகிறது. அதுவே இதற்குத் தீர்வாகிறது; எந்த வியாக்கியானமும் தேவையில்லை. தேவன் அதை ஏற்கனவே வியாக்கியானம் செய்திருக்கிறார். பாருங்கள், அது எவ்வளவு பரிபூரணமாக இருக்க முடியுமோ அவ்வளவு பரிபூரணமாக இருக்கிறது. 53 இப்பொழுது கவனியுங்கள், தேவன் ஜனங்களின் கவனத்தை கவர்ந்திழுக்க அடையாளங்களை அளிக்கிறார். 54 இங்கே எரிகிற முட்செடியானது தீர்க்கதரிசியை கவர்ந்திழுக்கும் அடையாளமாயிருந்தது; எரிகிற முட்செடி. மோசே வனாந்திரத்தின் பின்பக்கத்தில் தன்னுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான், வயோதிக ஆடு மேய்ப்பவன், எண்பது வயது, நீண்ட தாடி; ஒரு வேளை வெப்பமான காலை வேளையில் பழக்கமான ஒரு பழைய பாதையின் வழியாய் சென்று கொண்டிருந்தான். அதன்பின்னர், திடீரென்று, ஒரு முட்செடி அக்கினியானது உண்டானது, அது முட்செடியைப் பட்சித்துப் போடவில்லை. சரி, அது முற்றிலும் வழக்கத்திற்கு மாறானதாயிருந்தது. 55 இப்பொழுது, மோசே ஒரு விஞ்ஞானி, அவன் எகிப்தியருடைய எல்லா ஞானத்திலும் போதிக்கப்பட்டிருந்தான், அவர்கள் இன்றைக்கு நாம் கொண்டிருப்பதைக் காட்டிலும் பெரிய விஞ்ஞானிகளை உடையவர்களாயிருந்தனர்; எனவே அவன் ஒரு விஞ்ஞானியாருந்தபடியால், அவன, “இப்பொழுது அந்த மரமானது எரிந்து போகாதபடிக்கு என்ன விதமான…இரசாயனம் அந்த இலைகளின் மேல் தெளிக்கப்பட்டுள்ளது என்று பார்க்கப்போகிறேன்” என்பது போன்று கூறியிருந்திருக்கலாம். பாருங்கள், அவன் அதை ஒரு விஞ்ஞான வழியில் அணுகியிருந்தால், அது அவனிடம் ஒருபோதும் பேசியிருக்காது. 56 இன்றைக்கும் அவ்வாறே உள்ளது, நாம் பள்ளி மற்றும் கல்வியின் மூலம் ஒரு விஞ்ஞான வழியில் அணுக முயற்சித்துக் கொண்டிருக்கும்போது, நீங்கள் பத்து இலட்சம் மைல்கள் தூரத்தில் தேவனை இழந்து போவீர்கள். மோசே தன்னுடைய பாதரட்சைகள் கழற்றப்பட்ட நிலையில் அதை அணுகுவது போல அணுகுங்கள்; தாழ்மை, தாழ்மை. 57 மேலும், இப்பொழுது, தீர்க்கதரிசியை கவர்ந்திழுக்க அங்கே ஒரு அடையாளம் இருந்தது. இப்பொழுது, அங்கே, அந்த அடையாளம் ஒரு சத்தத்தை உடையதாயிருக்க வேண்டும். அந்தச் சத்தம் பேசினபோது, அது வேதப்பிரகாரமாக இல்லாமலிருந்தால், தீர்க்கதரிசி அதற்குச் செவி கொடுத்திருப்பான் என்று நான் நம்பவில்லை. ஆனால் அந்த அடையாளத்தோடு சேர்ந்து வந்த அந்தச் சத்தம் எவ்வளவு வேதப்பூர்வமானது என்பதைக் கவனியுங்கள், அது தேவன் என்பதை நிரூபித்தது, ஏனென்றால் அவர், “என் ஜனத்தின் முனகலை நான் கேட்டேன், நான் அவர்களுக்கு அளித்த வாக்குத்தத்தத்தை நினைவு கூருகிறேன்.” பாருங்கள், அடையாளம், அதன்பின்னர் அந்த அடையாளத்திற்குப் பின்னால் உள்ள வேதப்பிரகாரமான சத்தம். 58 இப்பொழுது நான் எதைப் பின்னணியாகக் கொண்டிருக்கிறேன் என்பதை அது சரியாகக் காண்பிக்கிறது. அது தேவனிடத்திலிருந்து வந்த ஒரு அடையாளமாக இருக்க வேண்டும், அது அவ்வாறு இருக்குமானால், அதற்குப் பின்னால் அந்த நாளின் வாக்குத்தத்தத்திற்காக ஒரு வேதப்பிரகாரமான சத்தம் இருக்க வேண்டும். அதே பண்டைய பாரம்பரியம் அல்ல; ரபீக்களும் மற்ற காரியங்களும் பள்ளிகளினூடாகச் சென்று கொண்டு, அல்லது ஒவ்வொரு காரியத்தையும், எல்லாவற்றோடும், எல்லாவற்றினூடாகவும், இருந்தவர்கள் குருமார்கள் போன்றவர்களே. ஆனால் இது ஒரு புதியதாய் உள்ளது, அது வேதப்பிரகாரமானதாய் உள்ளது, இது ஒரு வாக்குத்தத்தமாயுள்ளது; தீர்க்கதரிசியை கவர்ந்திழுக்கும் ஒரு அடையாளமும் உள்ளது. 59 அதன்பின்னர், அவர் இப்பொழுது அங்குச் செல்வதற்கு முன்பு, பாருங்கள், அவர்கள் அவனை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, அவன் ஒரு தீர்க்கதரிசி என்று தன்னை ரூபகாரப்படுத்த ஏதாவதொன்றை பெற்றிருக்க வேண்டும். “கர்த்தர் எனக்குத் தரிசனமானார் என்று அவர்கள் கூறமாட்டார்கள்” என்றார். 60 மேலும், “அப்படியானால், ஜனங்களின் கவனத்தை கவரும்படியாக, நான் உனக்கு இரண்டு அடையாளங்களைத் தருகிறேன். ஜனங்களின் கவனம் கவரப்படும்போது, அப்பொழுது இந்த வார்த்தைகளை அவர்களிடத்தில் கூறு, ‘நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவன், என் வாக்குத்தத்தத்தை நான் நினைவு கூருகிறேன்.’ அவர்களை விடுவிக்கும்படிக்கு நான் உன்னை அனுப்பியிருக்கிறேன், நான் உன்னோடு இருப்பேன்” என்றார். 61 அவனுடைய முதல் அடையாளத்தை நீங்கள் கவனித்தீர்களா? அவன் எல்லாவிதமான போலியான பாவனைகளையும் உடையவனாயிருந்தான். ஒவ்வொருவரும் ஒரு சர்ப்பத்தை கீழே வீச முயன்றனர். அது…அது ஜனங்களுடைய வழக்கமான காரியமாயில்லையென்றால், அது என்னவென்று எனக்குத் தெரியாது, பாருங்கள். பார்த்தீர்களா? ஆனால் அதற்குப் பின்னால் அவர்கள் எந்தவிதமான ஒரு சத்தத்தை உடையவர்களாயிருந்தனர்? ஒன்றுமில்லை; உலகத்தின் எகிப்திய சத்தம். அதே சமயத்தில் அவர்களால் அந்த அடையாளத்தை நிகழ்த்த முடிந்தது, ஆனால் அதை ஆதரிக்க, அதற்குப் பின்னால் உள்ள சத்தத்தை அவர்கள் பெற்றிருக்கவில்லை. ஆனால் மோசேயோ கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை உடையவனாயிருந்தான். அதுவே வித்தியாசமாயிருந்தது. ஆள்மாறாட்டக்காரர்கள் நீண்ட காலம் நீடித்தனர், ஆனால் முடிவிலே அது பயனற்றதாகிவிட்டது. 62 கடைசி நாட்களில் அது மீண்டும் சம்பவிக்கும் என்று வேதம் கூறியுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? “யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல, மனுஷர் சத்தியத்தைக் குறித்து கேடான சிந்தையுள்ளவர்களாயிருப்பார்கள்.” சத்தியம் என்றால் யார்? இயேசு கிறிஸ்துவே சத்தியம். பார்த்தீர்களா? “சத்தியத்தைக் குறித்த கேடான சிந்தை.” 63 இப்பொழுது யேகோவா தம்முடைய வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையின் மூலம் பேசப் போகிறார். அப்பொழுது அவர் இந்தத் தீர்க்கதரிசியை அனுப்பும்படி ஆயத்தப்படுத்த வேண்டும். ஏனென்றால், அது எப்பொழுதுமே அவருடைய சிந்தனையின் பாதையில், அவருடைய செய்கையின் பாதையில், ஒவ்வொரு முறையும் தம்முடைய தீர்க்கதரிசியை வார்த்தையோடு அனுப்பி, தீர்க்கதரிசியை ரூபகாரப்படுத்துகிறார். 64 மீண்டும், இது ஒரு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட அடையாளம். ஒரு தீர்க்கதரிசி, தாமே ஒரு அடையாளமாயிருக்கிறான். வேதம் அவ்வண்ணமாய் கூறியுள்ளது. நீங்கள் காலங்கள் கடந்து போவதைக் காணும்போது, அதன்பின்னர் வருவதைக் காணும்போது…வேதாகமத்தின் சரித்திரத்தை எடுத்து, அதை ஆராய்ந்து பாருங்கள். எப்பொழுதாவது நீங்கள் நீண்ட காலம் கடந்துவிட்டதைக் காணும்போதெல்லாம்; ஆனால் ஒரு தீர்க்கதரிசி தோன்றுவதை நீங்கள் கண்டபோது, அது நியாயத்தீர்ப்பின் அடையாளமாயிருந்தது. அவர்…அல்லது தேசம் அல்லது ஜனங்கள், ஒரு தீர்க்கதரிசி வருவதை நீங்கள் கண்டபோது, தேவன் உலகத்தை நியாயந்தீர்க்கப் போகிறார். நான் அதன் பேரில் ஒரு பிரசங்கத்தை பிரசங்கித்திருக்கிறேன், ஒலி நாடாக்களைப் பதிவு செய்பவரே உங்களுக்கு நினைவிருக்கும்…கண்டுகொள்ளாமல் விடப்பட்ட ஒரு உண்மையான அடையாளம். அவர்கள் எப்பொழுதுமே அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர், அவர்கள் எப்பொழுதும் அப்படித்தான் செய்தார்கள், ஆனால் அது வரப்போகும் நியாயத்தீர்ப்பின் அடையாளமாக இருந்தது. 65 இப்பொழுது அவருடைய வார்த்தையானது அவருடைய சத்தத்தில் நிறைவேறியுள்ளது. அவர் என்ன வாக்குத்தத்தம் செய்கிறாரோ, அப்பொழுது அவர் தம்முடைய வார்த்தையைச் சத்தத்தின் மூலம் நிறைவேற்றுகிறார். 66 ஒரு தீர்க்கதரிசியின் வருகை நியாயத்தீர்ப்பு சமீபமாயிருக்கிறது என்பதற்கு ஒரு எச்சரிக்கை அடையாளமாய் உள்ளது. எப்பொழுதுமே இருந்து வந்துள்ளது. நான் ஒன்றை மேற்கோள் காட்டட்டும். 67 ஜலப்பிரளயத்திற்கு முந்தின உலகத்தின் நாட்களில், நோவா உயிர்த்தெழுந்தபோது, ஒரு தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைத்தான். அது என்னவாயிருந்தது? உடனே நியாயத்தீர்ப்பு வந்தது. 68 மோசே எகிப்திற்குள் சென்றான், தீர்க்கதரிசியின் அடையாளங்களோடு ரூபகாரப்படுத்தப்பட்ட ஒரு தீர்க்கதரிசி. என்ன நடந்தது? அதன்பின்னர் எகிப்தில் நியாயத்தீர்ப்பு வந்தது. 69 தீர்க்கதரிசியாகிய எலியா காட்சியில் வந்து ஆகாபிடமும் அந்தத் தேசத்திடமும் தீர்க்கதரிசனம் உரைத்தான். என்ன நடந்தது? அதன்பின்னர் நியாயத்தீர்ப்பு அதைத் தாக்கியது. சரி. 70 யோவான் ஸ்நானன் ஒரு அடையாளமாக வந்தான். அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். அவன் பூமியில் வந்த ஒரு தீர்க்கதரிசியின்-அடையாளமாயிருந்தான். அவன் வரும்போது, அவனுக்குப் பிறகு மேசியா பேசுவார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அது இருக்க வேண்டும், ஏனென்றால் எடுத்துக் கொள்வதற்கு—தெரிந்துகொள்ளபட்டவர்களை எடுத்துக் கொள்வதற்கேயாகும். 71 நோவாவின் நாட்களில் நடந்தது போல, தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்கள் வெளியே வருவதற்காகவே இது உள்ளது. எலியாவின் நாட்களில் ஏழாயிரம் அல்லது எழுநூறு பேர்கள் இருந்தனர். அல்லது எவ்வளவாகயிருந்தாலும், தங்களுடைய முழங்கால்களை முழங்காற்படியிடாதிருக்கிறவர்களை வெளியே அழைத்தார். யோவான் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை அழைத்து, அவர் வந்தபோது, அதைக் கிறிஸ்துவுக்கு அளித்து, தன்னுடைய சபையை மாற்றிக் கொண்டு, அவன், “நான் சிறுக வேண்டும், அவர் பெருக வேண்டும், ஏனென்றால் ‘கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணுங்கள்’” என்றும், “நான் வனாந்திரத்தில் கூப்பிடுகிற அவரைக் குறித்த ஒரு சத்தமாய் இருக்கிறேன்” என்றான். இயேசுவும் அதே வழியில் வந்தார். தெரிந்து கொள்ளப்பட்டவர்களை தேவனுடைய சத்தத்தைக் கேட்க ஆயத்தப்படுத்துகிறது, அதுதான் தீர்க்கதரிசன அடையாளம். ஓ, நீங்கள் இந்தச் செய்திகளைப் பின்பற்றினால்…தெரிந்து கொள்ளப்பட்டவர்களை ஆயத்தப்படுத்துங்கள். மற்றவர்கள் அதை ஒருபோதும் கேட்கமாட்டார்கள். அது அழைக்கப்பட்டு தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கே. 72 சோதோமில் அந்த அடையாளத்தைச் செய்த அந்தத் தூதன் எங்கே வந்தார்? ஆபிரகாமுக்கும் அவருடைய குழுவினருக்கும். “சோதோமை விட்டு விலகி நில்லுங்கள்; அது எரியப்போகிறது!” பார்த்தீர்களா? அது மீண்டும் இந்தச் சோதோமில் நடக்கும் என்று இயேசு வாக்களித்துள்ளார். இப்பொழுது கவனியுங்கள். 73 அது என்ன செய்கிறது? அது நோவாவின் காலத்தில் நடந்தது போன்று, தெரிந்து கொள்ளப்பட்டவர்களை தேவனுடைய அடைக்கலத்திற்கு ஆயத்தப்படுத்துகிறது. 74 அது என்ன செய்கிறது? அது அறிவாற்றல் கொண்ட அவிசுவாசியை நியாயத்தீர்ப்புக்கு ஆக்கினைக்குட்படுத்துகிறது. அது எப்பொழுதுமே உண்டு. இரக்கத்தைப் புறக்கணிக்க, நியாயத்தீர்ப்பைத் தவிர வேறொன்றும் விடப்படவில்லை. எனவே அது அறிவாளிகளையும், அவிசுவாசிகளையும் நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தப்படுத்துகிறது. காரணம், அவர்கள் என்ன செய்கின்றனர்? அவர்கள் அதைக் கண்டிக்கின்றனர். 75 அந்தக் காரணத்தினால்தான் யூதர்கள் தங்களுடைய சொந்த மாம்சத்தைப் புசித்தனர். அந்தக் காரணத்தினால்தான் மகத்தான ரோம தளபதி தீத்து, அங்கே சவாரி செய்து வந்தபோது, நகரத்திலிருந்து இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது, ஏனென்றால் அவர்கள் பரிசுத்த ஆவியைப் புறக்கணித்திருந்தனர். நியாயத்தீர்ப்பு வரவேண்டியதாயிருந்தது, ஏனென்றால் அவர்கள் அதைக் குறித்து பரிகசித்திருந்தனர். அவர்கள் அவரைப் பெயல்செபூல் என்று அழைத்தபோது, இயேசு அவர்களிடம், “நான் உங்களை மன்னிக்கிறேன்” என்று அவர் கூறினார், பாவநிவிர்த்தி செய்யப்படாமலிருந்தது, “ஆனால், பரிசுத்த ஆவியானவர் வந்து அதேக் காரியத்தைச் செய்யும்போது, அதற்கு விரோதமாய்ப் பேசும்போது, அது ஒருக்காலும் மன்னிக்கப்படாது” என்றார். அந்தச் சந்ததி அதைக் குறித்து ஒருபோதும் மன்னிக்கப்படவில்லை. அது உண்மை. 76 அவிசுவாசிக்கு நியாயத்தீர்ப்பு! அது விசுவாசிக்கு வெளிச்சத்தையும், அவிசுவாசிக்கு இருளையும் கொடுக்க அந்த நோக்கத்திற்காகவே அங்கு வைக்கப்பட்டுள்ளது. அக்கினி ஸ்தம்பம் இருந்தது போல; வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குச் செல்ல அது வெளிச்சத்தையும், விசுவாசிக்காதவர்களுக்கு இருளையும் உண்டாக்கியது. தேவனுடைய அடையாளங்கள் எப்பொழுதும் அதைச் செய்கின்றன, அவிசுவாசியின் கண்களைக் குருடாக்கி, விசுவாசிக்குப் பார்வையையும், நடக்க வெளிச்சத்தையும் அளிக்கிறார். அதற்காகத்தான் அது அனுப்பப்பட்டுள்ளது. 77 அவனுடைய தீர்க்கதரிசனம் உண்மையாயிருந்தால், தீர்க்கதரிசியினுடைய தீர்க்கதரிசனம் உண்மையாயிருந்து நிறைவேறுமானால், அப்பொழுது அது தேவனுடைய எச்சரிப்பாகும். இப்பொழுது வேதாகமத்தில், எண்ணாகமம் 12:6-ல் அதேக் காரியத்தை நாம் காண்கிறோம். 78 வேதாகமம் இந்த மனிதர்களால் எழுதப்பட்டது. இப்பொழுது நாம் இரண்டாம் பேதுரு 1:21-ல் வாசிப்போமானால், அது, “பூர்வத்தில் மனிதர் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு வேதாகமத்தை எழுதினர்” என்று கூறப்பட்டுள்ளது. 79 எபிரெயர் 1:1-ல் அன்றொரு இரவு நாம் பேசினோம், “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும் தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினூடாக” என்றார். 80 அக்கினி ஸ்தம்பம், அடையாளம்; அல்லது அந்தச் சத்தம்…அந்தச் சத்தம் பேசப்போவதாயிருந்தது. முட்செடியில் இருந்த அக்கினி ஸ்தம்பம், தேவன் பேச ஆயத்தமாகிக் கொண்டிருந்த ஒரு குறிப்பிடத் தக்க சத்தமாய் இருந்தது. 81 இப்பொழுது தெளிவாகக் கவனியுங்கள், இதைத் தவறவிடாதீர்கள். மிரியாம் தன்னுடைய சகோதரனாகிய மோசேயைப் பார்த்து நகைத்திருந்தாள். அவள் ஒரு தீர்க்கதரிசினியாக இருந்தபோது, அவள் அவனைப் பார்த்து நகைத்தபோது, தேவன் அந்த அக்கினி ஸ்தம்பத்தில் இறங்கி வந்தார், தேவன் பேச ஆயத்தமாயிருந்தார் என்பதை மோசே அறிந்திருந்தான். அது ஒரு அடையாளமாயிருந்தது. அதைத் தொடர்ந்து வந்த அந்தச் சத்தம், “நீங்கள் தேவனுக்கு பயப்படவில்லையா?” என்று கேட்டது. “என் தாசனாகிய மோசேயைப் போல் தேசத்தில் யாருமில்லை” என்றார். 82 அவர்கள் எழும்பி அதே காரியத்தைச் செய்தபோது கூறப்பட்டதோ…தாத்தான், கோராகு எழும்பினபோது, “உங்களைப் பார்க்கிலும் மேலான் பரிசுத்தவான் உண்டு. நீ ஒருவன் மாத்திரமே அந்தக் கூட்டத்தில் இருக்கிறாய் என்று நீ நினைக்கிறாய்” என்றனர். அந்த வேலையைச் செய்யத் தேவன் மோசேயை நியமித்திருந்தார்! 83 அவர்கள் இன்னொரு கூட்டத்தைத் தங்களுடன் சேர்த்துக்கொள்ள விரும்பியபோது, தங்களை ஒரு அமைப்பாக்கிக் கொண்டனர். அவர், “அவர்களிடத்திலிருந்து உன்னைப் பிரித்துக்கொள். நான் அவர்களைக் கடிந்து கொள்வேன். நான் அவைகளை பட்சிப்பேன்” என்று கூறினார். அவர் அதைச் செய்தார். பூமி அவர்களை விழுங்கிப்போட்டது. 84 இப்பொழுது அது எப்பொழுதுமே தேவனுடைய வழியாய் இருந்து வந்துள்ளது என்பதை நாம் கண்டறிகிறோம். அக்கினி ஸ்தம்பம் சத்தம் பேச ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. ஓ, டெக்ஸாஸ், நீங்கள் எவ்வளவு குருடாயிருக்க முடியும்? நீங்கள் இன்னமும் ஹூஸ்டனை நினைவில் வைத்திருக்கிறீர்கள். இப்பொழுது அந்த அடையாளத்தை ஒரு சத்தம் பின் தொடருகிறது. 85 மோசே, இஸ்ரவேலருக்கு ஒரு தீர்க்கதரிசியின் அடையாளமாக, வார்த்தை ரூபகாரப்படுத்தப்பட ஆயத்தமாயுள்ளது என்று வாக்குப்பண்ணினான். 86 தேவனுடைய வார்த்தை ஒவ்வொரு முறையும் எவ்வளவு பரிபூரண ஒழுங்கில் உள்ளது! அன்றொரு இரவு நான் பேசினது போல, ஊரீம், தும்மீம் போன்றவை. ஊரீம், தும்மீம் என்பவை அங்கிருந்தன. அந்த அடையாளம் அந்த ஊரீம் மற்றும் தும்மீம் என்பதன் பேரில் வந்தாலொழிய, அந்தச் சத்தம் அடையாளம் கண்டு கொள்ளப்படவில்லை. ஒரு அடையாளம் இருக்க வேண்டும். அடையாளம் அந்தச் சத்தத்தை ரூபகாரப்படுத்துகிறது. அந்தச் சத்தம் அடையாளத்தை ரூபகாரப்படுத்துகிறது, அது தேவனிடத்திலிருந்து வருகிறது. அடையாளத்தின் சத்தம் “ஆம்” அல்லது “இல்லை” என்று உரைக்கிறது. தேவன் அதை மறுத்தால், அப்பொழுது சத்தம் “இல்லை” என்று உரைக்கிறது. அந்த அடையாளம் அங்கிருந்திருந்தால், தேவன் “ஆம்” என்று உரைத்தார். தேவனுடைய ஒழுங்கு ஒருபோதும் மாறவேயில்லை. நாம் அதன் பேரில் மணிக்கணக்கில் தரித்திருக்கலாம், ஆனால் அது ஒருபோதும் மாறவேயில்லை. 87 பாருங்கள், யோனா தீர்க்கதரிசி, அந்த அடையாளத்தைப் பாருங்கள். அவன் தர்ஷீசுக்கு செல்லும் தன்னுடைய பாதையில் இருந்தான். நினிவேக்குச் செல்லத் துவங்கி, தர்ஷீசுக்குப் போகும் ஒரு—ஒரு பாதையில் சென்றான். அநேகர் யோனாவைக் கண்டனம் செய்தனர். யோனா கண்டனம் செய்யப்படுவதற்கு ஏற்றவன் அல்ல. அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். “நீதிமானுடைய அடிச்சுவடுகள் கர்த்தரால் உறுதிப்படுத்தப்படும்,” அவன் தர்ஷீசுக்குப் போகும் தன்னுடைய பாதையில் செல்லத் துவங்கினான். நாம் அந்த மனிதனைக் கடிந்து கொள்ள முயற்சிக்கிறோம், ஆனால் இயேசு குற்றப்படுத்தவில்லை. 88 கவனியுங்கள், அவர், “யோனா மீனின் வயிற்றில் மூன்று இரவும் பகலும் இருந்தான்” என்று கூறினார். அது ஒரு அடையாளமாயிருக்க, “அப்படியே மனுஷகுமாரன் இரவும் பகலும் பூமியின் இருதயத்தில் இருக்க வேண்டும். ஒரு பொல்லாத விபச்சார சந்ததியோ ஒரு அடையாளத்தைத் தேடுகிறது, யோனாவின் அடையாளமேயல்லாமல் வேறே அடையாளம் அவர்களுக்குக் கொடுக்கப்படாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்றார். யோனாவின் அடையாளம் என்ன? உயிர்த்தெழுதல். இது அந்தச் சோதோமின் சந்ததி, விபச்சார, ஆவிக்குரிய விபச்சாரம், தேவனுடைய சத்தியத்திற்கு விரோதமாக ஆவிக்குரிய வேசித்தனம்…செய்து, அதைப் பரிகசித்தல். “ஒரு பொல்லாத விபச்சார சந்ததியார் அடையாளத்தைத் தேடுவார்கள், அப்பொழுது அவர்கள் அதைப் பெற்றுக் கொள்வார்கள், அது உயிர்த்தெழுதலின் அடையாளமாயிருக்கும்” என்றார். பாருங்கள், யோனா… 89 அந்த ஜனங்கள் அஞ்ஞானிகளாயிருந்தனர், அது ஒரு பெரிய…அது ஒரு வர்த்தக நகரமாக இருந்தது. பெரிய தொழிலே மீன்பிடித்தலாய் இருந்தது. அவர்கள் தேசம் முழுவதும் மீன்களை அனுப்பினர். அந்த மனிதர் மீனவர்களாயிருந்தனர். அதுவே தொழிலாயிருந்தது. அவர்கள் அஞ்ஞானிகளாயிருந்து, அவர்கள் மிருகங்களையும், விக்கிரகங்களையும் தொழுதுகொண்டு, மிகவும் பொல்லாங்கானவர்களாகிவிட்டனர். 90 இப்பொழுது இந்தத் தேசத்தைப் போலவே, பாலுணர்வு, ஹாலிவுட் மற்றும் எல்லாவிதமான, சபைகளிலும் கூட நிறைந்துள்ளது. என்ன சம்பவிக்கிறது என்பதைக் கவனியுங்கள். ஏன், சில சமயங்களில் சபையில் பாலுணர்வு கவர்ந்திழுப்பது கூட நவீனம் என்று அழைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு காரியத்தின் கீழ் இந்தத் தேசம் எப்படி நிற்க முடியும்? உங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொண்டு, அதைப் போன்ற காரியங்களின் பேரில் செயல்படுகிறீர்கள், அது எப்படி நிலைத்திருக்கும்? 91 என்னுடைய நல்ல நண்பர், ஜேக் மூர், அநேக ஆண்டுகளுக்கு முன்னர், “தேவன் இந்தத் தேசத்தை இதனோடு செல்ல அனுமதித்தால், அவர் ஒரு நீதியான தேவன் என்ற முறையில் சோதோம் கொமோராவை எழுப்பக் கடமைப்பட்டவராயிருப்பார், மேலும் அவற்றைச் சுட்டெரித்ததற்காக அவர்களிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார். 92 நீங்கள் நியாயத்தீர்ப்புக்கு கட்டுப்பட்டிருக்கிறீர்கள். அதை ஏற்றுக் கொள்ள வேறு வழியில்லை. அதை உங்களுடைய வேதாகமங்களில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நான் ஒரு வயோதிக மனிதனாகிக்கொண்டிருக்கிறேன். அது நியாயத்தீர்ப்புக்கு செல்லவில்லையா என்று நீங்கள் பாருங்கள். நான் ஒரு இயல்பான வாழ்க்கை வாழ்ந்தால், நான் அதைச் இயல்பான நேரத்தில் காண்பேன். இன்னும் சில வருடங்களில் அது நிகழும். 93 யோனா. அவர்கள் யாவரும் மீன் பிடிக்கச் சென்று கொண்டிருந்தபோது, இதோ கடலின் கடவுள், திமிங்கலம் மேலே வந்து, கரைக்கு வந்து, தீர்க்கதரிசியை கரையில் துப்பியது. என்ன ஒரு அடையாளம்! 94 தேவன் தம்முடைய தீர்க்கதரிசிக்கு ஒரு செய்தியை அளித்தார். இப்பொழுது அவர்கள் அடையாளத்தைக் கண்டனர், அவர்கள் அந்த அடையாளத்தை விசுவாசிக்கிறார்கள், இப்பொழுது செய்தி என்ன? “மனந்திரும்புங்கள்!” அதுவே அடையாளத்தின் சத்தம். அடையாளத்தின் சத்தம், “மனந்திரும்புங்கள், இல்லையென்றால் நாற்பது நாட்களுக்குள் நீங்கள் நிர்மூலமாவீர்கள்” என்பதாகும். அவர்கள் மனந்திரும்ப போதுமான அளவு அறிந்திருந்தனர். 95 இயேசு, “அவர்கள் இந்தச் சந்ததியைக் குற்றப்படுத்துவார்கள், ஏனென்றால் அவர்கள் யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு மனந்திரும்பினர்; யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்” என்றார். 96 “மனந்திரும்பு, இல்லையென்றால் நாற்பது நாட்களுக்குள் நீங்கள் நிர்மூலமாகிப்போவீர்கள்” என்பதே அந்தச் சத்தம். 97 யோவான் தீர்க்கதரிசி, நானூறு ஆண்டுகளுக்குப் பிறகு தீர்க்கதரிசியே இல்லாமலிருந்தபோது, ஒரு தீர்க்கதரிசியாக தோன்றும் ஒரு அடையாளமாக தோன்றினான். அவர்கள் எல்லா அறிவாற்றலையும் உடையவர்களாயிருந்தனர். அவர்களுக்கு என்ன ஒரு குழப்பம் இருந்திருக்கும் என்று நான் சற்று கற்பனை செய்து பார்க்கிறேன்! நானூறு ஆண்டுகள், தீர்க்கதரிசி இல்லை, ஆனால் மேசியா வர வேண்டிய நேரம் சமீபமாயிருந்தது. இப்பொழுது, யோவான் ஒரு அடையாளமாயிருந்தான், ஒரு தீர்க்கதரிசியாயிருந்தபடியால், மேசியா பேச ஆயத்தமாயிருந்தார் என்பதற்கு அடையாளத்தின் சத்தம்; ஏனென்றால், மல்கியா 3-ல், “நான் என் தூதனை எனக்கு முன்பாக அனுப்புவேன்” என்று நாம் காண்கிறோம். எலியா அவருடைய முகத்திற்கு முன்பாக வர வேண்டியவனாயிருந்தான், எலியா வர வேண்டியவனாயிருந்தான். யோவான் எலியாவின் ஆவியிலும் வல்லமையிலும் வந்து, வேதவாக்கியங்கள் என்ன செய்தனவோ அதையே சரியாகச் செய்தான், ஆனால் அவர்களோ அதைப் புரிந்து கொள்ளவில்லை. வேதம் அவ்வண்ணமாய்க் கூறுகிறது. மேசியா பேசப்போகிறார் என்பதற்கு அவன் ஒரு தீர்க்கதரிசியின் அடையாளம், அடையாளம். 98 அந்தத் தீர்க்கதரிசி, அதை மிக நன்றாக அறிந்தபடியால், அவன், “ஏன், இப்பொழுது ஒருவர் உங்களுக்கு மத்தியில் நின்று கொண்டிருக்கிறார். நான் பேசிக்கொண்டிருக்கிற அந்த மேசியா உங்கள் மத்தியில் இருக்கிறார். அவருடைய பாதரட்சைகளை அவிழ்க்க நான் பாத்திரன் அல்ல. அவர் ஒருவரே பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார். நான் மனந்திரும்புதலுக்கு ஏற்ற தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் அவர் எனக்குப் பின் வருவார். அவர் இப்பொழுது உங்கள் மத்தியில் இருக்கிறார்” என்றான். 99 ஒரு நாள் அவன் ஒரு வாலிபன் நடந்து வருவதைக் கண்டான். அவன் அந்த அக்கினி ஸ்தம்பத்தைக் கண்டான், ஒரு புறாவின் ரூபத்தில் வானத்திலிருந்து இறங்கி வர; ஒரு சத்தம், “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் வாசமாயிருக்க பிரியமாயிருக்கிறேன்” என்று உரைத்தது. “நான் வாசம்பண்ணப் பிரியமாயிருக்கிறேன்” என்று கூறுகிறது. அது வினையுரிச்சொல்லுக்கு முன்னால் உள்ள வினைச்சொல், எனவே எந்த வித்தியாசமும் இல்லை. “நான் இவரில் வாசமாயிருக்க பிரியமாயிருக்கிறேன்” அல்லது “இவரில் வாசமாயிருக்க நான் பிரியமாயிருக்கிறேன்” என்பது எந்த வித்தியாசத்தையும் உண்டுபண்ணுகிறதில்லை. கவனியுங்கள், “நான் அவருக்குள் வாசம்பண்ண பிரியமாயிருக்கிறேன்.” 100 யோவான், “வனாந்திரத்தில் எனக்குச் சொன்னவர் என்று நான் சாட்சி பகிருகிறேன்,” வேதபாட கருத்தரங்கில் அல்ல, “வனாந்தரத்திலே, ‘ஆவியானவர் இறங்கி, தங்கியிருக்கிறதை நீ காண்பாய்’ என்றும், ‘அவர் ஒருவரே பரிசுத்த ஆவியினாலும், அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்.’ ஆமென், அது சத்தியம் என்று நான் சாட்சி பகருகிறேன்” என்றான். 101 அது என்னவாயிருந்தது? மேசியா பேச ஆயத்தமாயிருந்தார் என்பதற்கு அந்தத் தீர்க்கதரிசி ஒரு அடையாளமாயிருந்தான். 102 மேசியா என்னவாயிருந்தார்? மேசியா முழுமையாக வார்த்தையாயிருந்தார். அவர் தேவனுடைய பரிபூரணமாயிருந்தார். தீர்க்கதரிசிகள் ஒரு சிறிய மினுமினுக்கும் ஒளியாய் இருந்தனர். ஆனால் அந்த ஒளி முழுவதும் அவரில் இருந்தது, இந்த மேசியாவில் இருந்தது, ஏனென்றால் அவர் வெளிப்பட்ட தேவனாயிருந்து, இம்மானுவேலை, மானிட சரீரத்தில் நமக்கு மத்தியில் தேவனாக்கினார். 103 மேசியா பேச ஆயத்தமாயிருந்தார். கவனியுங்கள், “கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசியினிடத்தில் வருகிறது” என்று வேதம் கூறுகிறது. 104 இப்பொழுது இங்கே யோவான் நின்றான், அதாவது இயேசு, “எப்போதும் வாழ்ந்த தீர்க்கதரிசிகளிலேயே மகத்தான தீர்க்கதரிசி” என்று கூறினார். இயேசு அவ்வண்ணமாய்க் கூறினார், மத்தேயு 11-ம் அதிகாரம், “எதைப் பார்க்கப் போனீர்கள், ஒவ்வொரு காற்றினாலும் அசைக்கப்படும் ஒரு மனிதனையா, இந்த ஸ்தாபனம்: ‘நான் உங்களுக்கு அதிகமாகக் கொடுப்பேன் என்றும்; நீங்கள் இதைச் செய்கிறீர்களா’? என்று கூறுகிறதையோ. யோவான் அப்படிப்பட்டவன் அல்ல! இல்லை, இல்லை. தள்ளிவிடக்கூடிய, ஏமாற்றக்கூடிய ஒரு மனிதனா? இல்லை, அவன் ஒரு முரட்டுத்தனமான, கரடுமுரடான தீர்க்கதரிசியாயிருந்தான். முழுவதுமாக ஆசாரியத்துவ வஸ்திரம் தரித்திருந்த ஒரு மனிதனைக் காண நீங்கள் சென்றீர்களா?” மேலும் அவர், “இல்லை, அவர்கள் இராஜாக்களின் அரண்மனைகளில் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் வாலிபர்களை விவாகம் செய்கிறார்கள், குழந்தைகளை முத்தமிடுகிறார்கள், வயோதிகர்களை அடக்கம் செய்கிறார்கள். அந்தவிதமாகத்தான் இருக்கிறது. இரண்டு கரங்களால் கையாளப்படுகிற பட்டயத்தைக் குறித்து அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. அப்படியானால் ஒரு தீர்க்கதரிசியைக் காண, நீங்கள் புறப்பட்டுச் சென்றீர்களா?” என்று கேட்டார். அவன், “ஒரு தீர்க்கதரிசியிலும் மேன்மையுள்ளவன்!” என்றார். நிச்சயமாகவே, அவன் உடன்படிக்கையின் தூதனாயிருந்தான், அவனை அனுப்புவதாகத் தேவனால் வாக்களிக்கப்பட்டிருந்தது. 105 இங்கே கவனியுங்கள், யோவான் தண்ணீரில் நின்றுகொண்டு, ஞானஸ்நானம் கொடுத்து, “அவர் வருகிறார்” என்று கூறுகிறான். 106 இங்கே வார்த்தை உள்ளது, அது இனி பரலோகத்தில் இல்லை, ஆனால் மாம்சமானார். வார்த்தை மாம்சமானது, அப்பொழுது அதற்கு என்ன சம்பவிக்கிறது? தேவனுடைய வேதவாக்கியத்தின் ஒழுங்கு என்ன? வார்த்தையானது தீர்க்கதரிசியினிடத்தில், வனாந்திரத்தில், குளத்தில் வந்தது. வார்த்தை தீர்க்கதரிசியினிடத்தில் வந்தது. 107 யோவான் அண்ணாந்து பார்த்து, “நான் உம்மாலே ஞானஸ்நானம் பெற வேண்டும்” என்றான். 108 என்னுடைய அருமையான, வயதான சகோதரன், வேதபண்டிதர் டேவிஸ், மிஷினரி பாப்டிஸ்டு சபை, கிறிஸ்தவ விசுவாசத்தில் எனக்கு ஞானஸ்நானம் கொடுத்தவர், அவர் இன்றிரவு இங்கே இருப்பாரானால், அவருடைய உணர்வுகளைப் புண்படுத்த வேண்டும் என்று நான் கருதவில்லை. காரணம், அவர் இங்கே டெக்ஸாஸில் வசிக்கிறார், இங்கே டேவிஸ் மலைகளில் இருக்கிறார். ஆனால் அந்த ஒரு நாளில் நாங்கள் வாக்குவாதம் செய்தது எனக்கு நினைவிருக்கிறது, நான் ஒரு வாலிபனாக இருந்தேன். நான், “வேதபண்டிதர் டேவிஸ் அவர்களே, அது சரியாகத் தெரியவில்லையே” என்றேன். 109 அவர், “என்ன சம்பவித்தது, அதன்பின்னர் இயேசு யோவானுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார், அதன்பின்னர் யோவான் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான், ஏனென்றால் யோவான் ஞானஸ்நானம் பண்ணப்படாதிருந்தான்” என்றார். அது எனக்குச் சரியாகத் தென்படவில்லை. 110 நான் தொடர்ந்து காத்திருந்து, கவனித்து, சிந்தித்துக் கொண்டிருந்தேன். நான் அதைக் குறித்து ஒன்றும் கூறாமல் இருந்தேன், ஆனால் ஒரு நாள் கர்த்தர் அதை வெளிப்படுத்தினார். 111 இப்பொழுது இயேசு என்ன கூறினார் என்பதைக் கவனியுங்கள். யோவான், “நான் உம்மாலே ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிருக்க, நீர் ஏன் என்னிடத்தில் வருகிறீரே?” என்று கேட்டான். 112 இயேசு, “இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது” என்றார். 113 தான் யாரென்பதை யோவான் அறிந்திருந்தான். உலகத்தின் இரண்டு தலைவர்கள், சபையின் இரண்டு தலைவர்கள், தேவனும் அவருடைய தீர்க்கதரிசியும் ஒன்றாக நின்று கொண்டிருக்கின்றனர். இப்பொழுது, கவனியுங்கள், அவர்கள் அறிந்திருக்க வேண்டும். 114 இயேசு, “இதற்கு இடங்கொடு, அது உண்மை, ஆனால் இவ்விதமாக நாம் எல்லா நீதியையும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது” என்று கூறினார். 115 பலி செலுத்தப்படுவதற்கு முன்பு அது கழுவப்பட வேண்டியதாயிருந்தது. இயேசு பலியாக இருந்த காரணத்தால் யோவான் அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். பார்த்தீர்களா? பலி செலுத்தப்படுவதற்கு முன்பு அது கழுவப்பட வேண்டியதாயிருந்தது. அவர் அங்கே நடந்து சென்றார், பலி கழுவப்பட்டது, அதன்பின்னர் அவர் முன்வைக்கப்படுகிறார். அவன், “அது தேவ ஆட்டுக்குட்டி” என்றான். 116 அவர் கரைக்குச் சென்றார், இதோ தேவனுடைய ஆவி அவர்மேல் இறங்கி வந்து, “இவர் என்னுடைய நேசகுமாரன்” என்றார். பாருங்கள், அப்பொழுது அவர் பொது ஜனங்களுக்கு முன்பாக அளிக்கப்பட்டார். ஆனால் பலி செலுத்தப்படுவதற்கு முன்பு, அது முதலில் கழுவப்பட வேண்டும்; அது பழைய ஏற்பாட்டின் பிரமாணமாயுள்ளது. சரி. 117 மேசியா பேச ஆயத்தமாகிக் கொண்டிருந்தார், ஏனென்றால் இங்கே தீர்க்கதரிசியின் அடையாளம் இருந்தது. அந்தத் தீர்க்கதரிசி காட்சியில் வருவதை அவர்கள் கண்டபோது, நானூறு வருடங்களாக ஒருவருமே இல்லாத இருந்த பிறகு, அடுத்த சத்தம் மேசியா என்று, அவர்கள் அறிந்து கொண்டனர். 118 இப்பொழுது வேத வாசிப்பாளர்களாகிய நீங்கள் ஒரு சில நிமிடங்கள் சரியாகச் சிந்தித்துப் பாருங்கள். அவனுடைய சுபாவத்தைக் கவனித்து, எப்படி அவர்கள் அவனைக் காணத் தவறினர்? யோவான், அது அவன்தான் என்பதை அவர்கள் எப்படி அறிந்து கொள்ளத் தவறினர்? அவனுடைய சுபாவம் அடையாளங்கண்டு கொள்ளப்பட்டது, அவனுடைய ஆவியும் சுபாவமும் எலியாவாக இருக்க அடையாளங்காட்டப்பட்டது. இப்பொழுது ஆவி என்ன என்பதைக் கவனியுங்கள். இப்பொழுது, அவன் யோவான் ஸ்நானன், ஆனால் அவன்மேல் இருந்தது எலியாவின் ஆவி. 119 கவனியுங்கள், முதலாவதாக, எலியா வனாந்திரத்தை நேசித்த ஒரு மனிதனாயிருந்தான். பார்த்தீர்களா? யோவானும் வனாந்திரத்தில் இருந்த ஒரு மனிதனாயிருந்தான். 120 எலியா அந்த ஸ்தாபன முறைமையைக் கண்டனம் செய்த ஒரு மனிதனாயிருந்தான், அந்த நாளில், அவனுக்கு உண்டாயிருந்த எல்லாவற்றையும் கொண்டு வந்தான். யோவானும் அவ்வாறே, “நீங்கள் பாம்புகளின் சந்ததியினர். கோபாக்கினைக்கு தப்பித்துக் கொள்ள உங்களை எச்சரித்தது யார்? நீங்கள், ‘என்னிடம் இது, அது, அல்லது மற்றது உள்ளது’ என்று கூறத் துவங்க வேண்டாம். தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார்.” இரண்டு சுபாவங்களையும் காண்கிறீர்களா? 121 எலியாவைப் பாருங்கள், அவன் தன் நாளின் வர்ணத்தை முகத்தில் பூசிய யேசபேல்களை, ஒழுக்கக்கேடான பெண்களைக் கடிந்து கொண்டான். யோவான் என்ன செய்தான்? அதே காரியம், ஏரோதியாளுக்கும். அவர்கள் இருவருமே அவர்களுடைய மரணத்திற்கு ஒரு காரணமாயிருந்தனர். 122 எலியாவைப் பாருங்கள், அவன் அந்த மகத்தான ஊழியத்தை செய்தபிறகு, அவன் மனநிலை சரியில்லாமல் அங்கே கிடத்தப்பட்டு, தேவன் அவனை எடுத்துக்கொள்ளும்படி ஜெபித்தான். யோவானும் அவ்வாறே செய்து, அங்கே படுத்துக் கொண்டு தன்னுடைய சீஷர்களை அனுப்பினான், “போய் அவரிடத்தில் கேளுங்கள். அந்த ஒருவர் அவர் தானா அல்லது நாம் வேறொருவரை எதிர்நோக்கியிருக்கிறோமா?” என்று கேட்டான். இயேசு அதை அறிந்திருந்தார். 123 அவன் எலியாவாயிருந்தான். அது அவனுடைய சுபாவமாய் இருக்க வேண்டும். அவன் எலியாவைப் போலவே அடையாளம் கண்டு கொள்ளப்பட்டான். அவன் எலியாவின் ஆவியில் இருந்தான். 124 எலியா, எலிசா, யோவான், மல்கியா 4, அதன்பின்னர் யூதர்களுக்கு, ஐந்து முறை அந்த ஆவி உபயோகிக்கப்பட வேண்டும். இன்றிரவு நாம் கடைசி நாட்களில் எலியாவின் ஆவியில் இருக்கிறோம். இப்பொழுது கவனியுங்கள். 125 இன்றைக்கு, நம்முடைய நவீன ஆகாப் தீர்க்கதரிசிகள் தங்கள் யேசபேல்கள் தங்கள் தலைமுடியை வெட்ட அனுமதிப்பதை, நீங்கள் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், தங்களுடைய முகத்திற்கு வர்ணம் பூசுவதும், குட்டைக்கால் சட்டை அணிவதும், சிகரெட் புகைப்பதும், எதைச் செய்தாலும் “அது பரவாயில்லை” என்று கூறுகின்றனர். நம்முடைய—நம்முடைய இன்றைய ஆகாப் தீர்க்கதரிசிகள் தங்களுடைய பள்ளிகளோடு சென்று, நிச்சயமாகவே, மனிதனால் உண்டாக்கப்பட்ட கோட்பாடுகளாலும், ஸ்தாபனங்களாலும் அவர்களைச் சுற்றி வழி நடத்திக் கொண்டிருந்தனர். அது என்ன? ஆகாப் தீர்க்கதரிசிகள். 126 காட்சியில் எழும்ப நமக்கு மற்றொரு மிகாயா தேவை. அல்லது ஆகாபின் காலத்தில், எலியா காட்சியில் வந்தான். அவனைக் குறித்துதான் வாக்குத்தத்தம் செய்யப்பட்டிருந்தது. 127 அவர்கள் செல்ல விரும்புகிற எந்த வழியிலும் அவர்களை வழி நடத்திச் செல்கிறார்கள். அவர்கள் இங்கே எங்காவது அவர்களைத் தவறாக நடத்தவில்லையென்றால், அவர்கள் அங்கே போய் இதில் சேர்ந்துகொண்டு, அவர்களுடைய—தங்களுடைய—தங்களுடைய கிறிஸ்தவ ஊழியத்தை இன்னமும் காத்துக் கொள்வார்கள். 128 பாருங்கள், அவர்கள் துவக்கத்திலேயே இரட்சிக்கப்படவில்லை. அவர்களுடைய சுபாவமே அதை நிரூபிக்கிறது. ஒரு முட்செடி மரத்திலிருந்து திராட்சை பழங்களைப் பெற முடியுமா? உங்களுக்கு ஒரு பூசணி கொடியிலிருந்து தர்பூசணிகள் கிடைக்குமா? அவர்கள் வார்த்தையோடு எந்தக் காரியத்தையும் செய்ய விரும்பவில்லை என்பதை அதே சுபாவமே காண்பிக்கிறது. அவர்கள் அதைப் பரிகசித்து, அதைத் தூஷிக்கிறார்கள். “கர்த்தர் உரைக்கிறதாவது, இந்தக் காரியங்கள் சம்பவிக்கும்” என்று எழுதப்பட்டிருக்கும்போது, அவர்கள் அதைக் குறித்து நகைத்து, அதைப் பரிகசிக்கின்றனர். 129 இயேசு, “கடைசி நாட்களில் தென்தேசத்து ராஜஸ்திரீ இந்தச் சந்ததியோடு எழும்பி, அதைக் குற்றஞ்சாட்டுவாள்; ஏனென்றால் அவள் பூமியின் எல்லைகளிலிருந்தும், ஒரு ஞானத்தின் வரம் கொண்ட ஒரு மனிதனைக் காண வந்தாள்” என்று கூறினதில் வியப்பொன்றுமில்லை. அவர், “சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்” என்றார். நிச்சயமாக. சாலமோன், அவனுடைய நாள் மகத்தான நாட்களில் ஒன்றாயிருந்தது. ஜனங்கள் யாவரும் தேவன் தங்களுக்கு அளித்த இந்த வரத்தை விசுவாசித்தனர், இந்தச் சாலமோன், அவனுடைய—அவனுடைய கீர்த்தி எங்கும் சென்றது. இந்த நாளின் ஜனங்களாகிய நாம்… 130 அமெரிக்கர்களாகிய நாம் எப்பொழுதுமே கம்யூனிசத்திற்கு எதிராக ஏதோ ஒரு திட்டத்தைக் கண்டறிய முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். இங்கே தேவனுடைய திட்டம், “மனந்திரும்புங்கள்! தேவனிடத்தில் திரும்புங்கள்!” என்பதாய் உள்ளது. ஏதோ ஒரு திட்டமா? அவர்கள் அதைச் செய்தால், நாம் கம்யூனிஸத்தை மறந்து விடுவோம். 131 இஸ்ரவேலர் யாவரும் தேவன் தங்களுக்கு அளித்த அந்த வரத்தை விசுவாசித்தபோது. இந்தக் கடைசி நாட்களில், தேவன் நமக்கு அளித்துள்ள வரத்தை அமெரிக்கா…விசுவாசித்தால், அவருடைய குமாரன் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, அவருடைய வாக்குத்தத்தத்தின்படி நமக்கு மத்தியில் ஜீவித்துக்கொண்டிருக்கிறார். நாம் அதை மாத்திரம் பேணிக் கொண்டிருந்தால் நலமாயிருக்குமே! 132 அது தெரிந்து கொள்ளப்பட்டவர்களிடம் மாத்திரமே செல்லும். “என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். பிதாவானவர் எனக்குக் கொடுத்த யாவும், அவர்கள் வருவார்கள்.” வெறும் விதை விதைத்தல்; சிலருக்கு இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் விழும், ஆனால் விதை விதைத்தல் எப்படியும் உண்டு. அது எங்கிருந்தாலும் அதனுடைய வேர்களைப் பிடிக்கும். அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். 133 கவனியுங்கள், அவர்கள் இங்கே இருந்தார்கள், அந்த நாளில் நாம் அதைக் கண்டறிகிறோம், ஆகாப், இஸ்ரவேலர், தேசத்தில் தாங்கள் செய்யத் விரும்புகிற எந்தக் காரியத்தையும் செய்யும்படி செய்துவிட்டான், இன்னும் தங்களை இஸ்ரவேலர் என்று உரிமை கோரினர். 134 எலியா எப்படி அந்தச் சந்ததியைக் கண்டனம் செய்தான், அவனுக்குள் இருந்த எல்லாவற்றோடும், தேவன் அவனை ரூபகாரப்படுத்தினார். அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். 135 வருகைக்கு முன்னர், யோவானும் அவ்வாறே செய்தான்! இஸ்ரவேலில் நடந்து வந்து…இந்த ஸ்திரீயை தன் சகோதரன் பிலிப்புவின் மனைவியாகிய ஏரோ-…ஏரோது விவாகம் செய்தான். நேராக அவனுடைய முகத்திற்கு முன்பாக நடந்து சென்றான்; அவன் சற்றேனும் தயங்கவில்லை. ஒரு போதகர் அவனை வெளியே தள்ளிவிடுவார் என்று அவன் பயப்படவில்லை. அவர் எந்த ஐக்கிய அட்டையையும் எடுத்துச் செல்லவில்லை; தேவனோடு மாத்திரமே இருந்தான். அவன் அவருடைய தீர்க்கதரிசியாயிருந்தான். வார்த்தை அவனோடு இருந்தது. அவன் எந்தப் பேராயரிடமோ அல்லது உதவிக்காரர்களிடத்திலோ சென்று கேட்க வேண்டியதில்லை. அவன் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தான். அவன் வார்த்தையை உடையவராயிருந்தான். அவன் நேராக அவனுடைய முகத்தை நோக்கி நடந்து சென்று, “நீ அவளை வைத்திருப்பது நியாயமல்ல” என்றான். சரி. அவன் எவருக்குமே தயங்கவில்லை. அந்தப் பொல்லாத பெண்கள் விபச்சாரம் செய்து, இழிவாக நடந்து கொள்கின்றனர்! 136 ஆமோஸைப் போல, அவன் காட்சியில் வந்தபோது, அங்கே நோக்கிப் பார்த்தான். அவன் எங்கிருந்து வருகிறான் என்பது கூட நமக்குத் தெரியாது. என்னே, அவன் எப்படியாய் அந்தச் சமாரியா பட்டணத்தை பார்த்திருக்க வேண்டும்! சுற்றுலாப் பயணிகள் செய்ததுபோல, எல்லா அழகானவர்களும், பிரசங்கிமார்களும் தேசங்களோடு இசைந்து, தேசங்களோடும், ஒவ்வொருவரோடும் உடன்படிக்கை செய்து, இன்னமும் பாவத்தில் ஜீவிக்கிறார்களே! அவனுடைய கண்கள் சுருங்கி, அவனுடைய வழுக்கைத் தலை பளபளப்பாயிருந்தது, இநதவிதமாக அவன் கீழே வந்தான். அவன் பார்ப்பதற்கு பெரிதாக ஒன்றும்…காணப்படவில்லை, ஆனால் அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை உடையவனாயிருந்தான். 137 இன்றைக்கு நமக்கு ஒரு ஆமோஸ் காட்சியில் தேவை. நாம் அவனை ஏற்றுக்கொள்வோமா? அவன் செய்ததைக் காட்டிலும் நிச்சயமாக இல்லை. அவன் காட்சியில் வந்து, அவன் ஒவ்வொரு ஸ்தாபனத்தையும், ஒவ்வொரு ஸ்தாபன அமைப்பையும், ஒவ்வொரு குட்டையான உடையை அணியும் ஸ்திரீகளையும், ஒவ்வொரு குட்டை முடியையுடைய யேசபேலையும் கண்டித்து உணர்த்துவான். அவன் அவர்களைச் சின்னாபின்னமாகக் கண்டித்துரைப்பான். அவர்கள் அவனை வீதியில் உதைத்து, “அந்தப் பழைய மதவெறியன்” என்று கூறுவார்கள். ஆனால் அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை உடையவனாயிருப்பான், ஏனென்றால் அது அந்தவிதமாகவே எழுதப்பட்டிருக்கிறது. ஸ்தாபனம் அவரை ஏற்றுக் கொள்கிறதா? இல்லை. 138 அவனுடைய திட்டத்திற்கு ஆதரவளிக்க யாருமே இல்லாதிருந்தனர். சமாரியாவைப் போல இந்த மகத்தான, அருமையான இச்சையின் பட்டிணம், எந்த ஐக்கிய அட்டையும் இல்லாத இந்தச் சிறு பெயர் தெரியாத நபரை, ஆதரவளிக்க அவனுக்கு யாரும் இல்லாமல், அல்லது வேறெந்த காரியத்தையும் அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா? அவர் எந்த ஆதரவையும் பெற்றிருக்கவில்லை. அவன் எந்தப் பள்ளியிலிருந்து வரவில்லை, அவன் எந்த ஐக்கிய அட்டையையும் பெற்றிருக்கவில்லை. ஆனால் அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை உடையவனாயிருந்தான். ஒரு தீர்க்கதரிசியாக அவனுடைய வருகை ஒரு அடையாளமாக இருந்தது. அவனுடைய சத்தம் தேவனிடத்திலிருந்து வந்தது, அது இரண்டாம் யெரொபெயாமின் நாட்களில் அடையாளங்காட்டப்பட்டது. அவன் கூறின யாவும் நிறைவேறின. 139 இப்பொழுது நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற இந்த நாளில், அது மீண்டும் நிகழ்வதை நாம் கண்டறிகிறோம். ஊழியக்காரர்களும் ஜனங்களும் பிரசங்க பீடத்தில் நிற்க வெட்கப்படுகின்றனர். சுவிசேஷம் அவர்களுக்கு ஒரு ஆகாரச் சீட்டாக மாறிவிடுகிறது. அவர்கள் எந்தக் காரியத்தையும் கூற பயப்படுகின்றனர், யாரோ ஒரு மனிதன் அவர்களை இதை, அதை அல்லது மற்றதை விட்டு வெளியே தள்ளிவிடப் போகிறான். 140 ஒரே ஒரு மனிதன் மாத்திரமே உங்களைப் பரலோகத்திலிருந்து வெளியேற்ற முடியும், அது தேவன். நீங்கள் அவருடைய வார்த்தையோடு தரித்திருந்து, எப்படி பரலோகத்தை விட்டு நீக்கப்படப் போகிறீர்கள்? அதற்காகத்தான் அவர் உங்களை அனுப்பினார். 141 நினைவிருக்கட்டும், வேதம் கூறியுள்ளது, எலியாவின் நாட்களில் இருந்தது போன்ற அப்படிப்பட்ட ஒரு காலத்தில், யோவானின் நாட்களில் இருந்தது போன்ற ஒரு நாளில், மல்கியா 4 மீண்டும் பூமிக்கு திரும்பப் போகிறான். “நான் எலியாவை அனுப்புவேன்.” 142 இப்பொழுது, “நான் என்னுடைய தூதனை எனக்கு முன்பாக அனுப்புகிறேன்” என்று மல்கியா 3-ம் அதிகாரத்தோடு இப்பொழுது குழப்பிக் கொள்ள வேண்டாம். அதுவும் கூட, எலியாவாயிருந்தது. 143 ஆனால் மல்கியா 4-ல், அவர், “கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே, பூமி முழுவதுமே சூளையைப் போல் எரியும், நீதிமான்கள் துன்மார்க்கரின் சாம்பலின் மேல் நடப்பார்கள்” என்றார். அதுதான் ஆயிர வருட அரசாட்சி. “நான் எலியா தீர்க்கதரிசியை அனுப்புவேன்.” அவன் என்ன செய்வான்? “அவன் பிள்ளைகளுடைய விசுவாசத்தை அப்போஸ்தல பிதாக்களிடத்திற்குத் திரும்ப அளிப்பான்,” வார்த்தைக்குத் திருப்புவான். அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருக்க வேண்டும். “நான் அவனை அனுப்புவேன்.” அவன் முற்றிலுமாக அடையாளம் கண்டு கொள்ளப்படுவான். அவனுடைய சுபாவம் சரியாக எலியாவினுடைய சுபாவம் போலவே இருக்கும். அவனுடைய செய்தியும் அந்த வரிசையில் சரியாக இருக்கும். அவன் கண்டனம் செய்து, இடித்துப் போடுவான். ஐக்கியம் இல்லை, ஒத்துழைப்பு இல்லை, ஒன்றுமே இல்லை, ஆனால் அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை உடையவனாயிருப்பான். 144 இப்பொழுது, நினைவிருக்கட்டும், எல்லாவிதமான குழுக்களும் எழும்பி நின்று, “இது எலியாவின் வஸ்திரம், இது எலியாவின் உபதேசம்” என்றனர். முழு குழுவும், ஒரு ஸ்தாபனமும், எலியாவின் குழுவாக அல்லது எலியாவின் அங்கியாக மாறினது. அது வேதவாக்கியமல்ல. தேவன் அதைப் போன்ற ஒரு குழுவுடன் ஒருபோதும் இடைபடவேயில்லை. 145 எலியாவும், யோவான் ஸ்நானனும் காட்சியில் வந்தபோது, இருவரும் குழுக்களையும், ஸ்தாபனத்தையும் கண்டனம் செய்தனர். அவர்கள் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை. அவர்கள் செய்தவிதமாகவே அவர் அவர்களைக் கண்டனம் செய்கிறார். எலியா, யோவான், இருவருமே. ஒரு குழுவோ அல்லது ஸ்தாபனமோ அல்ல. ஆனால் இருவருமே தங்களுடைய இரண்டு காலங்களிலும் குழுக்களையும் ஸ்தாபனங்களையும் கண்டனம் செய்தனர். 146 அப்பொழுது என்ன? முடிவு கால அடையாளம் நிச்சயமாகவே முடிவு கால சத்தத்தோடு வரும். அந்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு மனிதன், எலியா காட்சியில் வர வேண்டும். ஒரு காட்டுவாசி போன்றவன், அதை விரும்பி, ரூபகாரப்படுத்த காட்சியில் வந்தான். இப்பொழுது வேதம் என்னக் கூறுகிறது என்பதைக் கவனியுங்கள், அப்பொழுது நீங்கள் வஞ்சிக்கப்படமாட்டீர்கள், பாருங்கள், முடிவு கால அடையாளமும், கடைசி கால சத்தமும். 147 தேவன் ஒருபோதும் ஒரு குழுவுடன் இடைபடவேயில்லை, வேதத்தில் எங்குமே இல்லை. அவர் ஒரு தனிப்பட்ட நபருடன் தொடர்பு கொள்கிறார், ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் மற்றவனிலிருந்து வித்தியாசப்பட்டிருக்கிறான். ஒவ்வொரு மனிதனும், நம்முடைய கட்டைவிரல்கள் வித்தியாசமாக இருக்கின்றன, நம்முடைய மூக்குகள் வித்தியாசமாக இருக்கின்றன, நம்முடைய செயல்கள் வித்தியாசமாக இருக்கின்றன. அவர் ஒரு மனிதனைப் பெற்றுக்கொள்கிறார், அவன் அந்த வார்த்தையாக மாறும் வரையில் அவரால் அவனைப் பரிபூரணமான இசைவில் வைத்திருக்க முடியும். 148 அந்தக் காரணத்தினால்தான் பவுல், அவன், “எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, எனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு சாத்தானுடைய தூதனாய் இருக்கிறது” என்றான். பார்த்தீர்களா? மத்தேயு எழுதினான், லூக்கா எழுதினான், மாற்கு எழுதினான், இவையாவும், ஆனால், அவர்கள் இயேசுவைப் பின்பற்றி, அவர் என்ன கூறினார் என்பதை எழுதினர். ஆனால் பவுல் அவர் யாராயிருந்தார் என்பதைப் பற்றிய வெளிப்பாட்டைப் பெற்றிருந்தான், பாருங்கள், அந்தக் காரியத்தைத்தான் அவன்—அவன் கண்டான். அவனுடைய வெளிப்பாடு மிகவும் மகத்தானதாயிருந்தது. பழைய ஏற்பாட்டின் மோசேயைப் போல, அவர் அவனை வேதாகமத்தை எழுதும்படி செய்தார். அந்த மகத்தான மனிதன், பவுல், அவன் கொண்டிருந்த அந்த வெளிப்பாடு, புதிய ஏற்பாட்டின் இயேசுவே பழைய ஏற்பாட்டின் யேகோவா என்று அவன் அறிந்திருந்தான். அவன் அதைக் குறித்த வெளிப்பாட்டை உடையவனாயிருந்தான், அவன் அதை எபிரெயர்களுக்கும்…மற்றும் ரோமர்களுக்கும், எபேசியர்களுக்கும், மற்றும்—மற்றும் அனைத்தும். அவன்—அவன் இந்தக் நிருபங்களை எழுதினான். கவனியுங்கள், அவருடைய அடையாளம் சென்றபிறகு, அவன் நிரூபங்களை எழுதினான். 149 வருகையின் இந்தச் சுபாவம் அதே விதமாகவே இருக்கும். அது ஒரு குழுவாக இருக்காது. அது ஒரு மனிதனாயிருக்கும். தேவன் ஒரு மனிதனைத் தவிர வேறு எந்த வழியிலும் ஒருபோதும் ஈடுபடவில்லை. இப்பொழுது, எலியா ஒரு குழுவாயிருக்கவில்லை, யோவான் ஸ்நானன் ஒரு குழுவாயிருக்கவில்லை, அவர்கள் ஒரு தனிப்பட்ட நபராய் இருந்தனர். தேவன், மல்கியா 4, “நான் ஒரு குழுவை அனுப்புவேன்” என்று கூறவில்லை. “நான் எலியாவை அனுப்புவேன்!” என்றார். வார்த்தையை மாற்ற முடியாது. 150 இப்பொழுது கவனியுங்கள், கடைசி கால அடையாளமும் சத்தமும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருந்தபடியே வேதவாக்கிய வரிசையில் வரும். 151 முடிவின் அடையாளம் என்னவாயிருக்கும் என்பதை நாம் அறிந்துகொள்ள விரும்புகிறோம்? இயேசு மத்தேயு 24 மற்றும் 25-ல் கூறினார். வெளிப்படுத்தின விசேஷத்தில் 6-ம்…இல்லை 1-ம் அதிகாரத்திலிருந்து, பாருங்கள், 10-ம் அதிகாரம் வரையிலும், கூட, நமக்குக் கூறப்பட்டுள்ளது. அதன்பின்னர் அவர் 19-ம் அதிகாரத்தில் வருகிறார், அவருடைய வருகையில் ஆயிர வருட அரசாட்சி அமைகிறது, ஒரு வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்கிறார். 152 அது வரப்போகிறது, முடிவின் கால அடையாளம், இப்பொழுது முடிவிலே கவனியுங்கள், அது சரியாக வேதம் கூறுகிற விதமாகவே வரும். இப்பொழுது அடையாளத்தின் சத்தத்தைக் கவனியுங்கள். 153 இப்பொழுது, இயேசு, லூக்கா 17:30-ல், முடிவு காலத்தின் அடையாளத்தை வாக்களித்துள்ளார். கடைசி அடையாளம், தேவன் ஒரு மானிட சரீரத்தில் சாராளுக்குப் பின்னால் உள்ள கூடாரத்திலிருந்து அவளுடைய மனதில் இருந்த சிந்தனைகளைப் பகுத்தறிந்தார். அதைத்தான் அவர் கூறினார். அதுவே முடிவிலே அவர் வாக்குத்தத்தம் செய்த அடையாளம். வெ-…அது என்ன செய்யும் என்று அவர் கூறினார்? “கடைசி நாட்களில், மனுஷகுமாரன் வெளிப்படும்போது, அது வெளிப்படும்.” வெளிப்படுத்தப்படும்! மனுஷகுமாரன் வெளிப்படும்போது, அதுவே அவர் வெளிப்படுத்தப்படும் அடையாளமாயிருக்கும். இப்பொழுது அது அதைக் கூறவில்லையா என்று பாருங்கள். நிச்சயமாகவே கூறுகிறது. 154 இப்பொழுது நீங்கள், “இல்லை, அது வேறொன்றாக இருக்கும். இல்லை, இது ஒரு மகத்தான கட்டிடமாகவோ, ஒரு மகத்தான இதை, அல்லது இதை, அல்லது ஏதோ ஒரு பெரிய உலக ஆலோசனை சங்கத்தை அல்லது வேறெதாவதொன்றாகவோ கட்டப்படும்” என்று கூறுவீர்களா? ஓ, இல்லை. இல்லை, அது வெகு தூரத்தில் உள்ளது. அது மற்றொரு பக்கத்தில் உள்ளது. தேவன் என்ன செய்வதாகக் கூறினாரோ, அதற்கு விரோதமாக அது உள்ளது. 155 இப்பொழுது நாங்கள் கூறுவதைக் கவனியுங்கள். வேதவாக்கியங்கள் சரியாக இருக்கும், ஏனென்றால் நாம் சோதோமில் மாம்சப்பிரகாரமான அடையாளத்தை உடையவர்களாயிருக்கிறோம். இன்னும் ஓரினச்சேர்க்கையாளர்கள், தாறுமாறுகளும் மற்ற காரியங்களும் எப்போது இருந்தன, இப்பொழுது உள்ளது போன்று, “ஒரு பொல்லாத விபச்சார சந்ததி,” நீங்கள் உங்களுடைய தொலைக்காட்சியை இயக்கினாலே ஒரு விதமான அசுத்த அழுக்கான ஹாலிவுட் காரியங்களைக் காணாமல் இருக்க முடியாதல்லவா? ஜனங்கள், தங்களை கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொண்டு, ஜெபக் கூட்டத்திற்கு வராமல் வீட்டிலேயே தரித்திருந்து, அதைப் பார்ப்பார்கள். உங்களுக்குள் என்ன ஆவி உள்ளது என்பதை அது காண்பிக்கிறது. சரி. ஸ்திரீகள் அவர்களைப் போன்றே உடை உடுத்திக் கொள்வார்கள், ஆண்களோ அவர்கள் அங்குச் செய்வதுபோல அவர்களை வழி நடத்த அனுமதிப்பார்கள். நாம் ஹாலிவுட்டை நம்முடைய உதாரணமாகக் கொள்ளப் போகிறோமா அல்லது அதைக் குறித்த தேவனுடைய வார்த்தையை நாம் விசுவாசிக்கப் போகிறோமா? 156 அதே குழு தேவனுடைய வார்த்தை ரூபகாரப்படுத்தப்படுவதைக் காண முடிகிறது, அவர்கள் என்ன செய்கிறார்கள்? அதைப் பார்த்து சிரிக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் மரித்துவிட்டனர், நித்தியமாக மரித்துவிட்டனர். அவர்கள் ஒருபோதும் உயிரோடிருக்கவில்லை. அவர்கள் எப்போதாவது உயிரோடிருந்தால், அவர்கள் எப்பொழுதும் உயிரோடிருப்பார்கள், நித்தியமாக. ஆனால் அவர்கள் ஒருபோதும் உயிரோடிருக்கவில்லை. அவர்கள் எப்பொழுதுமே மரித்திருக்கிறார்கள். ஓ, அவர்கள் மெருகேற்றப்பட்டு, இதை, அதை அல்லது மற்றதை விசுவாசிக்கக்கூடும். 157 இயேசு, “மாயக்காரரே” என்று அவர்களிடத்தில், அந்நாளில் ஆசாரியர்களிடத்தில் கூறினார். “இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்றிருக்கும்போது, நீங்கள் எப்படி நன்மையானவைகளைக் கூற முடியும்? என்னை நல்லவர், ‘நல்ல ரபீ, நல்ல போதகர் என்று அழைக்கிறீர்களா’?” அவர்களுடைய இருதயத்தில் என்ன இருந்தது என்பதை அவர் அறிந்திருந்தார். அவர்களுடைய இருதயத்தில் என்ன இருந்தது என்பதை அவரால் அறிந்துகொள்ள முடிந்தது. அவர் வார்த்தையாயிருந்தார். 158 வேதம், “தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயிருக்கிறது, இருதயத்திலுள்ள நினைவுகளை வகையறுக்கிறதாயிருக்கிறது” என்று கூறியுள்ளது. 159 இப்பொழுது அந்தச் சோதோமின் அடையாளம் மாம்சப்பிரகாரமாக திரும்ப வந்துள்ளது. ஒவ்வொரு காரியமும் இயற்கையில் இருக்க வேண்டிய விதத்தில் சரியாக அமைந்திருந்தால், அப்படியிருக்கும்போது, ஒரே நேரத்தில் ஆவிக்குரிய பிரகாரமான காரியம் இங்கே இல்லையென்றால், அதை எப்படி உங்களுடைய சிந்தையிலிருந்து தள்ளிவிட முடியும்? இரண்டு அமைப்புகளும் காட்சியில் உள்ளன. ஆம், இயற்கையானது சரியானது என்று எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள்; ஆனால், ஓ, ஆவிக்குரியப்பிரகாரமான அவர்கள் அதை விசுவாசிக்க விரும்புகிறதில்லை, ஏனென்றால் அது அவர்களுடைய உபதேசத்தில் குறுக்கிடுகிறது. 160 லூக்கா 17-ம் அதிகாரம் அடையாளமாயுள்ளது. லூக்கா 17-ம் அதிகாரம் இயேசு கூறிய அடையாளமாயுள்ளது, அதாவது கடைசி நாட்களில் தேசங்களும், சபைகளும், ஜனங்களும் சோதோமில் இருந்ததைப் போன்றே இருப்பார்கள், புறஜாதி உலகத்தில், சோதோம் எரிக்கப்படுவதற்கு சற்று முன்பு. அங்கே ஆபிரகாமைப் போன்ற, ஒரு குழு இருக்கும். இயேசு, “சோதோமின் நாட்களில் நடந்தது போல” என்று கூறினபோது, திரும்பிச் சென்று சோதோமில் என்ன நடந்தது என்பதைப் பாருங்கள். நாம் வாசித்த அதே வேதாகமத்தை, அதே வேதாகமத்தை அவரும் வாசித்தார், இப்பொழுது திரும்பிச் சென்று அது என்னவென்று பாருங்கள். 161 இதோ ஒரு தெரிந்து கொள்ளப்பட்ட குழு, அழைக்கப்பட்டு, ஆபிரகாமின் குழு, அவர்கள் ஒரு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். சோதோமியர்கள் அதைக் குறித்து ஒன்றுமே நம்பவில்லை. சோதோமில் இருந்த வெதுவெதுப்பான சபை அங்கத்தினர்கள் இருந்தனர். அந்த மூன்று தூதர்கள் அவர்கள் ஒவ்வொருவரிடமும் வருவதைப் பாருங்கள், அவர்கள் என்ன அடையாளங்களைக் காண்பித்தார்கள் என்பதைக் கவனியுங்கள், அப்பொழுது நாம் என்ன அடையாளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் காண்பீர்கள். 162 இப்பொழுது, அதுவே அடையாளமாய் இருக்கும். அடையாளத்தின் சத்தம் மல்கியா 4, “பிதாக்களின் அப்போஸ்தல விசுவாசத்திற்கு ஜனங்களைத் திரும்ப அளிப்பதாக” இருக்கும். சரியாக வேதவாக்கியத்தின்படி அங்கே அடையாளம் உண்டு, அங்கே சத்தம் உண்டு. பார்த்தீர்களா? அந்த அடையாளம் சோதோமில் இருந்தது என்பதற்கு அடையாளமாயுள்ளது, தேவன் மானிட வர்க்கத்தில் வெளிப்பட்டார். அப்பொழுது அவர், “உன் மனைவி சாராள் எங்கே?” என்று கேட்டார். “அவள் உமக்குப் பின்னால் உள்ள கூடாரத்தில் இருக்கிறாள்” என்றான். 163 “நான் உனக்கு வாக்குத்தத்தம் செய்த காலத்தின்படியே நான் உன்னைச் சந்திக்கப் போகிறேன்” என்றார். அவர் கூறினார்… 164 சாராள், பின்னால், அவருக்குப் பின்னால், “நான் ஒரு வயதான பெண்மணியாயும், அவர் ஒரு வயதான மனிதனாயுமிருக்க, அது எப்படி இருக்க முடியும்? அங்குள்ள என் கணவரைப் போல, ஒரு வயோதிக மனிதன்,” என்று கூறி, “எங்களோடு அப்படிப்பட்ட ஒன்றுமில்லை” என்றாள். “அது அவ்வாறு இருக்க முடியாது” என்றாள். 165 அதற்கு அவர், “சாராள் ஏன் அதைச் சந்தேகித்து, ‘இவைகள் எப்படி சம்பவிக்கக்கூடும்’ என்று தன் இருதயத்தில் கூறினாள்?” என்றார். 166 அது மீண்டும் திரும்ப வரும் என்று இயேசு கூறினார். இப்பொழுது, ஆபிரகாம் அந்த மனிதனை “ஏலோகிம்” என்று அழைத்தான், தேவன். அவர் தேவனாயிருந்திருக்க வேண்டும். ஏன்? அவரால் சிந்தனைகளை வகையறுக்க முடிந்தது, அவர் சரியான நேரத்தில் இருந்தார். ஏலோஹீம், பரிசுத்த ஆவி, (மற்றொரு நபர் அல்ல) அதே நபர் சபைக்குள் திரும்பி வந்து, அதே காரியத்தைச் செய்வார், அதுவே அடையாளமாக இருக்கும். அப்பொழுது அந்தச் சத்தம் “அவர்களை வார்த்தைக்குத் திரும்ப அழைத்து, பிள்ளைகளுடைய விசுவாசத்தை பிதாக்களுக்குத் திரும்பளிக்கும்.” அங்கே அடையாளமும் சத்தமும் உள்ளது. 167 அடையாளங்கள் வழக்கமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, ஆனால் சத்தம் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அவர்கள் சத்தத்தை விரும்புகிறதில்லை, ஆனால் அவர்கள் அடையாளத்தை எடுத்துக்கொள்வார்கள். வழக்கமாக, அவர்கள் அதை எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் அந்த அடையாளத்தை விரும்புகிறார்கள், ஏனென்றால் அவர்கள் அதைப் பார்க்க விரும்புகிறார்கள், அவர்களை மகிழ்விக்கிறது. ஆனால் சத்தம், அவர்கள் அதைச் செய்ய விரும்பவில்லை. இப்பொழுது அந்தச் சத்தத்தை நினைவுகூருங்கள். 168 மீண்டும் வார்த்தைக்குத் திரும்புங்கள். இயேசுவின் மேசியாவின் அடையாளம், ஏசாயா 35-ம் அதிகாரத்தின்படி, “முடவன் மானைப் போலக் குதிப்பான்” மற்றும் இவையாவும். 169 “அது அற்புதமாயிருந்தது!” ஓ, அவர்கள் அதை ஏற்றுக்கொண்டனர். அது நன்றாக இருந்தது. அவர்கள் அதை விசுவாசித்தனர். அவர்கள் அந்த அடையாளத்தை விசுவாசித்தனர். “ரபி, என் சபைக்கு வாருங்கள், நாங்கள் உமக்கு முழு ஒத்துழைப்பை அளிப்போம். நிச்சயமாக, நாங்கள் உம்மை விசுவாசிக்கிறோம். நீர் அற்புதமானவர். நீர்தான் ரபி. நீர் அந்த வாலிப தீர்க்கதரிசி. உள்ளே வாருங்கள்! எல்லாவிதமான ஒத்துழைப்பும்! அந்த அடையாளம் அற்புதமானது.” 170 ஆனால் அந்தச் சத்தம் பேசினபோது, “நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” என்று உரைத்தது. 171 ஓ, என்னே, அவர்களால் அதை விசுவாசிக்க முடியவில்லை. “நீ உன்னைத் தேவனாக்கிக் கொள்கிறாய்.” அவர்கள் அந்தச் சத்தத்தை விரும்பவில்லை. அவர்கள் அந்த அடையாளத்தை விரும்பினர். அது மேசியாவின் அடையாளம் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர், ஆனால் அந்தச் சத்தத்தை அவர்கள் விரும்பவில்லை. “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்.” அவர்களோ, “அவர் பெயல்செபூல்” என்றனர். அவர், “நீங்கள் பாம்புகளின் சந்ததி” என்றார். 172 ஓ, அவர்கள் அந்த சத்தத்தை வெறுத்தனர். அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் அந்தச் சத்தத்தை அவர்கள் மத்தியிலிருந்து வெளியேற்றினர். அவர்கள் அவரை வெளியே தள்ளினர். 173 இயேசு, “வீட்டின் எஜமானையே அவர்கள் ‘பெயல்செபூல்,’ என்று அழைத்தால், அவருடைய சீஷர்களை அவர்கள் அழைப்பது எவ்வளவு நிச்சயம்?” என்று கூறினார். 174 வெளிப்படுத்தின விசேஷம் 3-ம் அதிகாரத்தில் லவோதிக்கேயா சபையின் காலத்தில் இருந்தது என்பதை, நினைவில் கொள்ளுங்கள். இது லவோதிக்கேயா; சோதோமின் அடையாளம் வரப்போகிறது. சத்தம், “இந்தக் கோட்பாடுகளிலிருந்தும், ஸ்தாபனங்களிலிருந்தும் விலகி, வார்த்தைக்குத் திரும்புங்கள், வார்த்தைக்குத் திரும்புங்கள்,” வெளிப்படுத்தின விசேஷம் 3-ம் அதிகாரத்தின்படி அது வந்தபோது, அப்பொழுது இருந்தது போலவே, அவர் சபையிலிருந்து வெளியே தள்ளப்பட்டார். 175 “அடையாளம் சரிதான், ஆனால் சத்தமோ சரியில்லை.” அவர்கள் அந்தச் சத்தத்தோடு எந்தக் காரியத்தையும் செய்ய விரும்புகிறதில்லை. இல்லை, இல்லை; சத்தம். ஆனால் மோசே கூறினான், அவர்கள் விரும்பவில்லையென்றால், அல்லது… 176 176 தேவன் மோசேயிடம், “அவர்கள் முதலாம் அடையாளத்தின் முதல் சத்தத்தை நம்பாமல் இருப்பார்களானால், இரண்டாம் சத்தத்தின்படி அவர்களை நம்பச் செய்ய முயற்சி செய். அவர்கள் அதைச் செய்யவில்லையென்றால், அப்பொழுது போய்க் கொஞ்சம் தண்ணீரைக் கொண்டுவந்து, அதைத் தரையிலே ஊற்று” என்றார். அதுவே அதைத் தீர்த்து வைக்கிறது. அவ்வளவுதான். இயேசு கூறினதுபோல, வேறு வார்த்தைகளில் கூறினால், “உங்களுடைய கால்களிலுள்ள தூசியைக்—தூசியைக் கழுவுங்கள்”. மேலும், “ஆற்றிலிருந்து கொஞ்சம் தண்ணீரைக் கொண்டுவந்து, அதைத் தரையிலே ஊற்றி, இரத்தமாகி, அந்த இரத்தத்தில் தான் அவள் நனையப் போகிறாள் என்பதை காண்பி” என்றார். எனவே அது சரியாக அப்படி இருந்தது. 177 அவர்கள் அந்த அடையாளத்தை விசுவாசிக்கவில்லையென்றால், அப்பொழுது மூன்றாம் அடையாளம் உண்மையாகவே அதை நிறைவேற்றியது. எல்லா ஊழியங்களும் தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்டிருந்தால், அவைகளுக்கு மூன்று அடையாளங்கள் உண்டு. இயேசுவுக்கு மூன்று அடையாளங்கள் இருந்தன. மோசே மூன்று அடையாளங்களை உடையவனாயிருந்தான். நோவா மூன்று அடையாளங்களை உடையவனாயிருந்தான். எலியாவுக்கு மூன்று அடையாளங்கள் இருந்தன. ஒவ்வொரு காரியமும் மூன்று அடையாளங்களில் வருகிறது. கவனியுங்கள். நண்பர்களே, கவனியுங்கள். 178 இப்பொழுது சற்று தாமதமாகிக் கொண்டிருக்கிறது. நான்…ஓ, என்னே, காலதாமதமாகிவிட்டதை நான் அறியேன், கால் மணி நேரம் கழித்திருக்கிறது. 179 லூக்காவின் சோதோமின் அடையாளத்தை உங்களால் விசுவாசிக்க முடிந்தால், பாருங்கள், அவர் அதை வாக்குத்தத்தம் செய்துள்ளார்; நீங்கள் சோதோமின் அடையாளத்தை விசுவாசிக்கிறீர்கள், “வார்த்தைக்குத் திரும்பும்படியாக” அந்த அடையாளத்தைப் பின் தொடரும் மல்கியா சத்தத்தை ஏன் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை? [ஒலிநாடாவில் காலியிடம்—ஆசி.] வேதம் அவ்வண்ணமாய்க் கூறுகிறது, நீங்கள் அதைக் கண்டு, அடையாளத்தின் சத்தத்திற்கு செவிகொடுங்கள். 180 வரப்போகும் கோபாக்கினைக்கு தப்பியோடுங்கள்! “நான் யுபிசி, அசெம்பளீஸ் ஆஃப் காட், மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன் சபையைச் சேர்ந்தவன், எனக்கு உள்ளே செல்ல உரிமை உண்டு” என்று நினைக்க வேண்டாம். தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்கு பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார். வார்த்தைக்குத் திரும்புங்கள்! உங்களுடைய உலகப்பிரகாரமான கொள்கைகளிலிருந்தும், உங்களுடைய ஸ்தாபன முறைமைகளிலிருந்தும், மற்ற காரியங்களிலிருந்தும் பின்வாங்கிப் போங்கள். தேவன் அவர்களைப் பூமியிலிருந்து அழித்துப் போடுவார். அவர் அவர்களை மறதியின் கடலின் ஆழத்தில் மூழ்கடித்து, அவர் இஸ்ரவேலரை ஒரு தேசத்திலிருந்து வெளியே மற்றொரு தேசத்திற்கு அழைத்தபோது, அவர் எகிப்திற்கு செய்தது போல. அவர் சபையிலிருந்து மணவாட்டியை அழைக்கும்போது, அவள் உபத்திரவங்களினூடாகச் சென்று, பூமியின் மேல் அவளுடைய இரத்தத்தை நனைத்து விடுவாள். வரப்போகும் கோபாக்கினை சமீபமாயிருக்கிறபடியால், அதற்குத் தப்பித்துக் கொள்ளுங்கள்! 181 இவையல்லாமல் நீங்கள் இந்தக் காரியங்களைக் காண முடியாது…அவைகளைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. அவைகளை வாசிக்கவும், அதைக் குறித்து பேசவும் மாத்திரமே நான் பொறுப்பாளியாயிருக்கிறேன். உங்களைப் பொறுத்தது! நீங்கள் அடையாளத்தை விசுவாசிக்க முடியும், அதன்பின்னர் அந்த அடையாளத்தைப் பின்தொடரும் சத்தத்தையும் விசுவாசியுங்கள். ஓ, என்னே! 182 பாருங்கள், மோசே இப்பொழுது வெளியே செல்வதற்கு முன்னடையாளமாயிருக்கிறான். பிதாக்களுக்கு அளிக்கப்பட்டிருந்த ஒரு வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அந்த ஜனங்களுக்குக் கூற வேண்டியவனாயிருந்தான். “அவர்களுடைய பிதாக்களுக்கு நான் அளித்த வாக்குத்தத்தத்தை நான் நினைவு கூருகிறேன்.” இப்பொழுது மோசே என்ன—என்ன செய்ய வேண்டும்? பிதாக்கள் கூறினதற்கு ஜனங்களின் இருதயங்களைத் திருப்புவதற்காகவே. மோசே அப்பொழுது இருந்ததுபோல, மல்கியா 4, “ஜனங்களைப் பிதாக்களின் விசுவாசத்திற்குத் திரும்பும்படி” செய்ய வேண்டும். 183 இந்த எல்லா ஸ்தாபனங்களின் முறைகேடுகளும், இன்னும் மற்றவைகளும், வார்த்தைக்குத் திரும்புங்கள்! நான் உங்களை அறிவேன், அநேக ஜனங்கள் அதைச் செய்ய விரும்புகிறார்கள்; நான் உங்களை இங்கே திட்டிக் கொண்டிருக்கவில்லை. இந்த ஒலிநாடாக்கள் உலகம் முழுவதும் செல்கின்றன, பாருங்கள், எங்கும் செல்கின்றன. நான் உங்களைத் திட்டிக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அது யாராயிருந்தாலும், அது எங்கிருந்தாலும், நான் அவர்களைத் திட்டிக் கொண்டிருக்கிறேன். நான் ஒரு விதையை விதைக்கிறவன். எனக்குச் செய்யத் தெரிந்ததெல்லாம் அவ்வளவுதான். நீங்கள்தான் தீர்மானம் எடுக்க வேண்டும். ஜனங்களே வரப்போகும் கோபாக்கினைக்கு தப்பித்துக் கொள்ளுங்கள்! 184 நீங்கள் பெந்தெகொஸ்தேயினராயிருக்கிறபடியால் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்காதீர்கள். உங்களுடைய தாயார் ஒரு அருமையான, பரிசுத்தமாக்கப்பட்ட மெத்தோடிஸ்டு அல்லது உங்களுடைய தந்தையார் ஒரு நல்ல, சத்தமிடும் பாப்டிஸ்டாக இருந்தபடியால் என்று எண்ண வேண்டாம். அது உங்களுக்கு ஏதோக் காரியத்தையும் செய்யப் போகிறது என்று எண்ணிக்கொள்ளாதீர்கள். நீங்கள் அவர்கள் கட்டின சபையை அல்லது நீங்கள் இப்பொழுது கட்டிக்கொண்டிருக்கிற சபையைச் சேர்ந்தவர்கள் என்பதனால் என்று எண்ணிக்கொள்ளாதீர்கள். பெந்தேகோஸ்தேயினராகிய நீங்கள் அந்நிய பாஷைகளில் பேசி, ஆவியில் நடனமாடினீர்கள், நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், மாடிகளில் மேலும் கீழும் ஓடினீர்கள் என்பதனால் என்று நினைக்காதீர்கள். நீங்கள் சுகமளிக்கும் கூட்டங்கள் முதலியனவற்றை நடத்தியுள்ளீர்கள் என்பதற்காக என்று எண்ண வேண்டாம். 185 தேவன் ரூபகாரப்படுத்தியிருக்கிற, ஒரு அக்கினி ஸ்தம்பம் என்னும் அந்த அடையாளத்தைக் காணத் தவறாதீர்கள்; அதற்குப் பின்னால் உள்ள சத்தம், தேவனண்டை திரும்புவதற்கே. அது உங்களைக் கடந்து செல்ல அனுமதிக்க வேண்டாம். ஒரு அடையாளமும் ஒரு சத்தமும் உண்டு. 186 ஒரு மனிதன் ஒரு அடையாளத்தோடு எழும்பும்போது, அதே பண்டைய பாரம்பரியத்தோடு, ஏதோக் காரியம் தவறாய் உள்ளது, அது தேவனிடத்திலிருந்து வருகிறதல்ல. ஓ, என்னே! “இப்பொழுது அவருடைய பாதைகளைச் செவ்வைப்படுத்துங்கள்!” இப்பொழுது, நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? “அப்படியானால், குருடாயும் சிதறுண்டும்போனவர்களே, உங்களுடைய சொந்த இடத்துக்குத் திரும்புங்கள்.” வேதம்…பாடலாசிரியர் கூறினார்: நாடுகள் உடைந்து கொண்டிருக்கின்றன, இஸ்ரவேல் விழித்தெழுந்து கொண்டிருக்கிறது, வேதம் முன்னுரைத்த அடையாளங்கள்; புறஜாதி நாட்கள் எண்ணப்பட்டு, திகில்கள் சூழ்ந்துள்ளன; “ஓ, சிதறடிக்கப்பட்டவர்களே, உங்களுடைய சொந்த இடத்திற்குத் திரும்பி வாருங்கள்.” 187 திரும்பி வாருங்கள்! திரும்பி வாருங்கள்! தீர்க்கதரிசியோ, “சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்” என்றான். சூரியன் முற்றிலுமாக மறைவதற்கு முன்பு, அது வெளிச்சமாக இருக்கும். வெளிச்சம் இருக்கும்போது ஒளியில் நடந்து செல்லுங்கள். கொஞ்ச காலத்திலே உலக ஆலோசனை சங்கம் உங்களை பிடித்துக்கொள்ளும், அப்பொழுது வெளிச்சத்திற்கு வழியே இல்லை. நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. 188 பரலோகப் பிதாவே, அது இப்பொழுது உம்முடைய கரங்களில் உள்ளது. நான்—நான் விதையை விதைத்தேன். அவைகள் எங்கே விழுந்தன என்று எனக்குத் தெரியாது. அவர்கள் எங்கிருந்தாலும் நீர் அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அவர்கள் தங்களுடைய ஸ்தானத்தை கண்டுபிடித்து, கற்கள் நிறைந்த இடங்களையெல்லாம் அகற்றிப்போட்டு, ஆழமான வேர்களையும் அகற்றிப்போட்டு, அது இருந்தவிதமாகவே எல்லா ஓட்டு அவிசுவாசத்தையும் வழியிலிருந்து அகற்றிவிடும். பிதாவே, இதை அருளும். நாங்கள் இதை இப்பொழுது இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உம்மண்டை சமர்ப்பிக்கிறோம். ஆமென். 189 உங்களுடைய தலைகள் வணங்கியிருப்பதோடும், உங்களுடைய கண்களும் மூடியிருப்பதோடும் இருங்கள். நாளை இரவு ஒரு விருந்து உள்ளது. நகரத்தின் பாவிகளிடம், நான்…கர்த்தருக்குச் சித்தமானால், நான் அவர்களிடத்தில் பேச வேண்டும். நான் இப்பொழுது கலப்படமான ஒரு சபையோரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். நான் இதைப் பிரசங்கிக்கத் துணியமாட்டேன்; அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் அது அவர்களை முன்பைக் காட்டிலும் குருடாக்கும். 190 ஆனால் இன்றிரவு நீங்கள் அந்த அடையாளத்தைக் கண்டீர்கள் என்று விசுவாசித்து, நீங்கள் விசுவாசித்தால், உங்களால் அந்தச் சத்தத்தைக் கேட்க முடியுமா? அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்கள், ஆனால் நீங்கள்—நீங்கள் கிறிஸ்துவை தம்முடைய பரிபூரணத்தில் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை, நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்துவீர்களா? ஒவ்வொரு தலையும் இப்பொழுது வணங்கி, ஒவ்வொரு கண்களும் மூடப்பட்டிருக்கட்டும். உங்களுடைய கரத்தை உயர்த்தி, “சகோதரன் பிரான்ஹாம், நீங்கள் ஜெபிக்கையில் என்னை நினைவு கூருங்கள்” என்று கூறுங்கள். அதைச் செய்ய நான் மகிழ்ச்சியடைவேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 191 எங்களுடைய பரலோகப் பிதாவே, “விசுவாசித்தவர்கள் யாவரும் ஞானஸ்நானம் பெற்றார்கள்” என்று வேதம் உரைத்துள்ளது. கர்த்தாவே, தங்களுடைய கரங்களை உயர்த்திய இந்த ஜனங்கள், அவர்கள் அதில் விசுவாசங் கொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன், அவர்கள் கிறிஸ்தவ ஞானஸ்நானத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கவில்லை, அவர்கள் அதைச் செய்கிற சபையைக் கண்டறிந்து, ஞானஸ்நானம் பெறுவார்களாக. கர்த்தாவே, அதை அருளும். 192 அவர்கள் தண்ணீரினால் மாத்திரம் ஞானஸ்நானம் பண்ணப்படாமல், உட்புறத்தில் ஏதோ ஒன்று சம்பவித்துள்ளது என்பதற்கு அது ஒரு—ஒரு புறம்பான அடையாளம். வேதம், “ஒரே விசுவாசம், ஒரே கர்த்தர், ஒரே ஞானஸ்நானம்” என்று கூறியுள்ளது. அந்த ஞானஸ்நானம் ஆவிக்குரிய ஞானஸ்நானம். சரீரம் கழுவப்படுகிறது, அது வெறுமனே ஒரு எடுத்துக்காட்டாய் அல்லது உட்புறத்தில் ஏதோ காரியம் சம்பவித்துள்ளது என்பதற்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பதாய் உள்ளது. ஆனால் அந்த ஆத்துமா பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும், அதுவே நித்தியமானது அந்த மானிட சுபாவத்திற்குள்ளாக வந்து, அதை ஒரு விசுவாசியாக ஆக்குவதற்காக அதைச் சுற்றிலும் மாற்றுகிறது. அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். நான் அவர்களை இப்பொழுது செய்தியின் வெற்றிச் சின்னங்களாகவும், கிறிஸ்துவின் கிருபையாகவும் இருக்கும்படிக்கு அவர்களுக்குக் கட்டளையிடுகிறேன். அவருடைய நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென். இப்பொழுது உங்களுடைய தலைகளைப் பயபக்தியாய் வணங்கியிருப்பதோடு. 193 எனக்கு ஏழு நிமிடங்களே உள்ளன. என்னால்—என்னால் சரியான நேரத்திற்கு வெளியே செல்ல முடியவில்லை. என்னால்—என்னால்—என்னால் அவ்வளவு நேரத்தில் ஜெப வரிசையை வைத்திருக்க முடியாது. நீங்கள் இருக்கும் இடத்திலேயே உங்களை உட்காரும்படி நான் கேட்டுக் கொள்ளப் போகிறேன். உங்களைத் தாமதப்படுத்தியதற்காக நான் வருந்துகிறேன். நாம் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிப்போம். ஜனங்களாகிய நீங்கள், இங்குள்ள உங்களில் சிலர் ஜெப அட்டைகளை வைத்துள்ளீர்கள், கவலைப்படாதீர்கள், நாங்கள் உங்களை அழைப்போம். 194 ஆனால் பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது நமக்கு வெளிப்படுத்துவாரா என்று நாம் பார்க்கப் போகிறோம், நீங்கள் அவரில் விசுவாசங்கொண்டு, இதுவே அடையாளம் என்று நீங்கள் விசுவாசித்தால் நலமாயிருக்கும். நினைவிருக்கட்டும், தூதன், அவர் ஒரு மனிதனாயிருந்தார்; அவர் ஆபிரகாமுக்கு முன்பாகப் புசித்தார், குடித்தார், அதே சமயத்தில் அவரால் கூடாரத்தில் இருந்த சாராளை, அவளுடைய இருதயத்தில் இருந்த சிந்தனைகளை அவரால் பகுத்தறிய முடிந்தது. அதுவே அடையாளமாயிருந்தது. அவர் வார்த்தையாயிருந்தார். இப்பொழுது வார்த்தை நம்மிடம் மாத்திரம் வர முடிந்தால், அப்பொழுதும் கூட, அவர் அதேக் காரியத்தைச் செய்வதாக வாக்குப்பண்ணினார். 195 இப்பொழுது அங்கே கூட்டத்தில் உள்ள உங்களிடத்தில், ஜெப அட்டைகள் இல்லாதவர்கள், நீங்கள் அந்த வரிசையில் இருக்கப் போவதில்லை என்பது உங்களுக்குத் தெரியும், கர்த்தர் எனக்குக் காண்பித்தாலொழிய எது எது என்று என்னால் பகுத்தறிய முடியாது. நான்…தேவன் நிச்சயமாகவே வியாதியஸ்தரை சுகப்படுத்துகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். ஒரு சில நிமிடங்கள் நீங்கள் இப்பொழுது விசுவாசிக்க வேண்டும் என்று நான்—நான் விரும்புகிறேன். அப்படியே ஜெபியுங்கள், “கர்த்தராகிய இயேசுவே, அந்த மனிதன், பேசுகிற, ஒரு மனிதன் என்பதை நான் அறிவேன், ஆனால் அவன் அதை என்னிடத்தில் கூறினான், இன்றிரவு நமக்கு அதை நிரூபித்து, அதாவது பரிசுத்த ஆவியை, உலகத்தினால் கொல்ல முடியாது என்று நமக்குச் சொல்லி இருக்கிறான்.” 196 இயேசு மாம்சத்தில் இருந்தபோது, அவர்களால் அவரைக் கொல்ல முடிந்தது; அவர்கள் அவரைக் கொலை செய்தனர். ஆனால் இப்பொழுது அவர் ஒரு மகிமையான நிலையில் உயிரோடெழுந்திருக்கிறார், அவர் இனி ஒருபோதும் கொல்லப்பட முடியாது. மேலும் அவர், “இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது. அதே சமயத்தில் நீங்கள்,” முன்குறிக்கப்பட்டவர்கள், நித்திய ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்டவர்கள், சபை, மணவாட்டி, “நீங்கள் என்னைக் காண்பீர்கள், ஏனென்றால் நான் முடிவுபரியந்தம் உங்களோடும், உங்களுக்குள்ளும் இருப்பேன். நான் செய்கிற காரியங்களை நீங்களும் செய்வீர்கள்” என்றார். இந்த எல்லா வாக்குத்தத்தங்களையும் அவர் அளித்துள்ளார். 197 இப்பொழுது, அவர் இங்கே பூமியில் இருந்தபோது, அவர், தேவன் அவருக்குள் இருந்தார் என்பதை நான் அறிவேன். அவர் தேவனாயிருந்தார். அவர் தேவனுடைய பரிபூரணமாயிருந்தார். அவர் தேவனுடைய வார்த்தை முழுவதும் வெளிப்படுத்தப்பட்டவராயிருந்தார். 198 வேதாகமம் இன்னமும் தேவனாய், வார்த்தையாய் உள்ளது. இன்னும் சில வெளிப்பாடுகள் வெளிப்பட வேண்டியதாயுள்ளது. அவர், “கடைசி நாட்களில் உலகம் சோதோமைப் போல் ஆகும்போது, மனுஷகுமாரன் வெளிப்படுவார்” என்றார். சோதோமின் அடையாளம் திரும்ப வரும், அப்பொழுது சத்தம் ஜனங்களை, ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்டுள்ளவர்களை திரும்ப அழைக்கும். 199 அவர் இங்கிருந்தபோது, அவர் இங்கிருந்தார் என்பதை ஒருபோதும் அறியாத கோடிக்கணக்கான ஜனங்கள் பூமியில் இருந்தனர் என்பதை நாம் அறிவோம்; அறிந்து கொள்ள எந்தக் காரணமும் இல்லை. பார்த்தீர்களா? அவர் அதைக் காண முன்குறிக்கப்பட்டிருந்தவர்களிடத்திற்கு வந்தார். 200 இப்பொழுது நீங்கள் ஜெபியுங்கள். இப்பொழுது உண்மையாகவே அமைதியாயிருங்கள். நகர வேண்டாம். நீங்கள் எங்கிருந்தாலும், மாடியின் மேல்மாடிகளிலோ, கீழ் தளங்களிலோ, நீங்கள் எங்கிருந்தாலும், அசையாமல், அப்படியே அமைதியாக அமர்ந்து ஜெபியுங்கள். 201 “கர்த்தராகிய இயேசு, வேதத்தில், எபிரெயர் 4-ல், நீர் இப்பொழுதே, ‘எங்களுடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடிய பிரதான ஆசாரியராய்’ இருக்கிறீர் என்று கூறுகிறது. நாங்கள் உம்மைப் பூமியில் காண்கிறோம், நீர் இங்கே பூமியில் இருந்தபோது, ஒரு சமயம் ஒரு சிறிய ஸ்திரீ உம்முடைய வஸ்திரத்தைத் தொட்டாள், நீர் திரும்பி, ‘என்னைத் தொட்டது யார்?’” என்று கேட்டீர். அவள் தன்னை மறைத்துக் கொண்டாள், ஆனால் அதே சமயத்தில் அவளுடைய விசுவாசம் அடையாளங்கண்டு கொள்ளப்பட்டது. இயேசு அவளிடத்தில் அவளுடைய உதிரப்போக்கை குறித்துக் கூறி, “விசுவாசம் உன்னை இரட்சித்திருந்தது” என்றார். இப்பொழுது அவர் அதே பிரதான ஆசாரியராய் இருக்கிறார். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருப்பாரானால், நீங்கள்—நீங்கள் அவரைத் தொட்டால், அவர் அதேவிதமாகவே செயல்பட வேண்டும். 202 அப்பொழுது அது என்ன செய்கிறது? அவருடைய சத்தத்தைப் பேச, பூமியில் மானிட மாம்சம் இருக்க வேண்டும். “நானே திராட்சைச் செடி, நீங்கள் கொடிகள்.” நண்பர்களே, அதைக் கடந்து செல்ல வழியேக் கிடையாது. அது வேதவாக்கியமாயுள்ளது. அது சத்தியமாயிருக்கிறது. அங்கே பின்னால் உள்ள ஊழியக்காரர்களாகிய, நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 203 இப்பொழுது அங்கே வெளியே, “கர்த்தராகிய இயேசுவே, நான் உம்முடைய வஸ்திரத்தைத் தொடட்டும்” என்று கூறி, உண்மையான பயபக்தியோடு ஜெபியுங்கள். 204 எனக்கு மிக அருகாமையில் உள்ள ஒருவர், இருபது அடி அல்லது அதற்கும் மேலானது என்பதை நீங்கள் காண்கிறீர்கள். அங்கே எந்த ஒரு ஆத்துமாவையும் எனக்குத் தெரியாது. இன்றிரவு, இங்கே முன்னால் அமர்ந்துள்ள பேட் டைலர்;என்னுடைய நண்பர் ஒருவரைத் தவிர; எனக்கு உண்மையிலேயே அமர்ந்திருக்கும் யாரையும் தெரிந்தவர்களாக என்னால் பார்க்கக் கூட முடியவில்லை. அங்கே ஜனங்கள் கட்டில்களிலும், படுக்கைகளிலும் உள்ளனர். 205 நேற்றிரவு ஒரு படுக்கையில் இருந்த நபரை வெளிப்படுத்தினதை நாம் கண்டோம், அந்த மனிதன் எழுந்து நடந்து சென்றார். இன்றிரவு, ஏன் உங்களால் முடியாதா? பாருங்கள், அப்படியே விசுவாசியுங்கள், நீங்கள் செய்ய வேண்டியது அவ்வளவுதான். அவருடைய பிரசன்னம் அதைச் செய்யும். இதோ அவர் இருக்கிறார், கடைசி நாட்களில் உங்களை எழுப்ப நீங்கள் அவருக்காக நிற்க வேண்டியதாயுள்ளது. 206 இப்பொழுது, விசுவாசிக்கிற நீங்கள், நீங்கள் ஜெபித்துக்கொண்டிருக்கிறபடியால், இப்பொழுது இந்த ஒரு வழியாகப் பாருங்கள். 207 பேதுருவும் யோவானும், “எங்களை நோக்கிப் பாருங்கள்” என்று கூறினது போல. அவர்கள் கவனமாக நோக்கிப் பார்த்தனர், அந்த மனிதன் ஏதோ ஒன்றைக் காண எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவன், “வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை…” 208 இப்பொழுது, சுகமளித்தலை என்னிடத்தில் இல்லை, ஆனால் என்னிடத்தில் உள்ள, தேவனிடத்திலிருந்து பெற்ற ஒரு வரத்தை, நான் உங்களுக்கு அளிக்கிறேன். நீங்கள் அதை விசுவாசித்தால், தேவன் அதைக் கிரியை செய்வார். நீங்கள் அதை விசுவாசிக்கும்படி மாத்திரமே நான் கேட்டுக்கொள்ளுகிறேன். என்னிடத்தில் உள்ளதை நான் உங்களுக்குத் தருவேன். நீங்கள் அதை விசுவாசித்தால், தேவன் அதைக் கிரியை செய்வார். அதை முயற்சித்துப் பாருங்கள். 209 இதோ, இதோ அது இப்பொழுது உள்ளது. ஆமென். நான் அதை விரும்புகிறேன். இங்கே ஒரு பெண்மணி உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் ஒருவிதமாகப் பருமனாக, இங்கே முனையில் அமர்ந்திருக்கிறாள். பெண்மணியே, உன்னிடம் ஒரு ஜெப அட்டை இருக்கிறதா? ஒருவிதமாகப் பருமனாக…உங்களிடம் ஒரு…இங்கே, நீங்கள் ஒரு ஜெப அட்டையை வைத்திருக்கவில்லையா? ஆம். நீங்கள் ஒரு ஜெப அட்டையை வைத்திருக்கவில்லையா? எப்படியாயினும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசித்தால், உங்களுக்கு ஒரு ஜெப அட்டை தேவையில்லை. 210 அந்தச் சத்தத்தில் ஒரு எதிர் சத்தம் உள்ளது, ஆகையால் தான் இந்தவிதமான ஜனங்களை அழைப்பது கடினமாயுள்ளது, ஆனால் இப்பொழுது உங்களால் முடிந்தளவு கூர்ந்து கவனிக்க முயற்சியுங்கள். 211 எனக்கு உங்களைத் தெரியாது. உங்களிடம் ஜெப அட்டை இல்லை, எனவே நீங்கள் மேடையின் மேல் இருக்கமாட்டீர்கள். உங்களுடைய தொல்லை என்னவென்பதை தேவன் எனக்கு வெளிப்படுத்துவாரானால், (என்ன?) அந்த ஸ்திரீயின் தொல்லை என்னவாயிருந்தது என்பதை அந்த ஸ்திரீக்கு அவர் வெளிப்படுத்தினது போல, அது அதே காரியமாக இருக்கும் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களா? கிணற்றண்டையிலிருந்த ஸ்திரீயா? சாராள், அவள் கூறியிருந்தவை என்ன? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அது சரியாயிருக்கும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 212 நீங்கள் ஒரு இரத்த சம்பந்தமான நோயினால் அவதியுற்றுக் கொண்டிருக்கிறீர்கள், உங்களுடைய இரத்தத்தில் ஏதோ கோளாறு உள்ளது. அது உண்மையானால், உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். சரி. இப்பொழுது நீங்கள் அதைப் பெற்றிருக்கவில்லை. அது உங்கள்மேல் வெளிச்சத்தை திருப்புகிறது. இயேசு கிறிஸ்து உங்களைக் கனப்படுத்தியிருக்கிறார். 213 இப்பொழுது, நான் என்னுடைய ஜீவியத்தில், அந்தப் பெண்ணை ஒருபோதும் கண்டதேயில்லை. இப்பொழுது அது என்ன? அது ஆவியாயிருக்க வேண்டும். இப்பொழுது, பரிசேயர்கள், “அது பிசாசு” என்று நீங்கள் கூறலாம், பாருங்கள், நீங்கள் அவர்களுடைய பலனைப் பெற்றுக்கொள்ளலாம். நீங்கள், “அது கிறிஸ்து” என்று கூறினால், நீங்கள் கிறிஸ்துவின் பலனைப் பெற்றுக் கொள்கிறீர்கள். இந்தக் கடைசி நாளில் வார்த்தை அடையாளங்காட்டப்படுகிறது என்று நான் நினைக்கிறேன்; நான் அல்ல. 214 இதோ, இங்கே மற்றொரு சிறிய பெண்மணி இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் தன்னுடைய கால்களில் வீங்கிப் பருத்து வலிக்கிற நரம்புகளால் அவதியுற்றுக் கொண்டிருக்கிறாள். அவளுக்குச் சிக்கல்கள் உள்ளன. அவளுக்கு இருதயக் கோளாறு உள்ளது. அவள் ஒரு அன்பான ஒருவனுக்காக, அதாவது ஒரு சகோதரனுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அவள் இப்பொழுது அழுதுகொண்டிருக்கிறாள். அவள் தொடர்பில் இருக்கிறாள். அந்தச் சகோதரன் மிகவும் தீவிர மோசமாக இருக்கிறார். அது ஒரு சர்க்கரை வியாதி. மேலும், அவனுக்கு மற்றொரு நிழலும், கூட உண்டு, அவன் ஒரு பாவியாயிருக்கிறான். நீங்கள் அவருக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். அது உண்மை. செல்வி வெல்டன், நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசித்தால், தேவன் அவருக்காக அதைச் செய்வார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அதுதான் உங்களுடைய பெயர்கள். 215 இப்பொழுது இயேசு சீமோனிடத்தில், “உன் பெயர் சீமோன், நீ யோனாவின் குமாரன்” என்று கூறினதைக் காட்டிலும் இது அதற்குச் சரியாக இருக்கிறதா? விசுவாசமாயிருங்கள். அதைச் சந்தேகப்படாதீர்கள். அதை உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். நீங்கள் அதை விசுவாசித்தால், தேவன் அதை நிறைவேற்றுவார். உங்களால் முடிந்தால்… 216 இதோ, இங்கே ஒரு சிறு பெண்மணி இங்கே உட்கார்ந்து கொண்டு, இங்கே என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு ஒருவிதமான சிவப்பான முடி உள்ளது. அவளுடைய தலைமுடியை பின்னால் இழுத்துக்கட்டியிருக்கிறாள். 217 அந்த ஸ்திரீயின் மீது ஒருவிதமான மஞ்சள் கலந்த பச்சை நிறம் போன்ற ஒளி வட்டமிட்டுக் கொண்டிருப்பதை உங்களால் காணமுடியவில்லையா? அது இப்பொழுது சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதை அவள் அறிவாள், ஏனென்றால் அவள் அதை உணருகிறாள். அது அவளுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது, அவளால் அதை உணராமல் இருக்க முடியாது. பெண்மணியே, அது உண்மையென்றால், உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். இதோ அவள் இருக்கிறாள். 218 இப்பொழுது நான் உங்களுக்கு முற்றிலும் அந்நியனாயிருக்கிறேன். உங்களைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் நீங்கள் அங்கே உட்கார்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தீர்கள். அது உண்மை. அது உண்மையென்றால், இந்த விதமாக உங்களுடைய கரத்தை அசைத்துக் காட்டுங்கள். இப்பொழுது, இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரனாக இருந்தால், தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிற ஒரு பிரதான ஆசாரியன்…நான் இங்கே ஒரு வரத்தினால் நின்று கொண்டிருக்கிறேன், என்னை நானே…வெளியே மானிட சிந்தனையின் காரணமாகவே, சொந்தமாகச் சிந்திக்காமல், என்னுடைய சொந்த மனதையும் சிந்தனையையும் நிதானப்படுத்திக் கொள்வதே, தேவன் உள்ளே அசைவாட ஒரு வழியாகும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா…என்னை, நான் உங்களை அறியேன் என்று தேவன் அறிவார்; நீங்களும் அதையே அறிவீர்கள். ஆகையால் தேவன் உங்களுடைய தொல்லையை அல்லது நீங்கள் காத்திருக்கும் ஏதோ ஒன்றை எனக்கு வெளிப்படுத்துவாரானால், தேவையாயிருந்தால், அல்லது அதற்கும் மேலான ஏதோ ஒரு காரியத்தை, தேவனால் அதைச் செய்ய முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 219 உங்களுடைய முதுகில் உங்களுக்குக் கோளாறு உள்ளது. அந்த ஒரு காரியத்திற்காகவே நீங்கள் ஜெபித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய கண்களில் உங்களுக்குக் கோளாறு ஏற்பட்டுள்ளது. தேவன் அவைகளை சுகப்படுத்தி, அவைகளை குணமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் யாரென்று தேவனால் என்னிடம் கூற முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? திருமதி ஹால்மேன் அவர்களே, நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு இப்பொழுது விசுவாசியுங்கள், நீங்கள் கேட்டுக்கொண்டதை பெற்றுக்கொள்ள முடியும். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 220 இங்கே ஒரு வயோதிக ஸ்திரீ அங்கே அவளுக்குப் பின்னால் சற்று தூரத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவளும் கூட ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்குச் சர்க்கரை வியாதி உள்ளது. அவள் இதைத் தவறவிடமாட்டாள் என்று நான் நம்புகிறேன். அது அவளுக்கு மேல் உள்ளது. அவள் சிறிது வயோதிகமாக இருக்கிறாள். ஒரு நிமிடம், இப்பொழுது கர்த்தர் எனக்கு உதவி செய்வாராக. அவளுடைய…அங்கே அவள் அதைப் பிடித்தாள். சரி. அவள் தொடர்பு கொண்டிருந்தபோது நான் பார்த்தேன். அவள் இங்கிருந்து வரவில்லை. அவள் லூசியானாவைச் சேர்ந்தவள். அவளுடைய—அவளுடைய பட்டிணம் லூயிஸியானாவிலுள்ள சிங்கர் என்று அழைக்கப்பட்ட ஒரு இடம். அவள் சர்க்கரை நோயினால் அவதியுற்றுக் கொண்டிருக்கிறாள். அவளுடைய பெயர் திருமதி டாயில். அது உண்மையானால், உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். சரி. நான் அவளுக்கு முற்றிலும் ஒரு அந்நியனாயிருக்கிறேன், என் ஜீவியத்தில் அவளை ஒருபோதும் கண்டதேயில்லை. ஆனால் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து உங்களைக் குறித்த எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். 221 சிங்கர் என்றழைக்கப்படுகின்ற ஒரு இடத்திலிருந்து, அதே பட்டிணத்திலிருந்து வந்த ஒரு பெண்மணி அங்கே பின்னால் அமர்ந்து கொண்டிருக்கிறாள். அவள் உயர் இரத்த அழுத்தத்தினால் அவதியுற்றுக் கொண்டிருக்கிறாள். அவளுடைய பெயர் கிளார்க். திருமதி கிளார்க், நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி, நீங்கள் கேட்டுக்கொண்டதை பெற்றுக்கொள்ள முடியும். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 222 அதுதான் அடையாளம்! சத்தத்திற்கு செவிகொடுங்கள்! மனந்திரும்பி, உங்களால் முடிந்தளவு துரிதமாகத் தேவனண்டை திரும்புங்கள்! இயேசு கிறிஸ்து தம்முடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் இங்கே இருக்கிறார்; ஒரு பொல்லாத விபச்சார சந்ததி ஜனங்களின் மத்தியில் ஜீவிக்கிற இயேசு கிறிஸ்துவின் அடையாளத்தைப் பெற்றுக் கொள்கிறது. அவர் என்னோடு மாத்திரம் அதைச் செய்ய முடியாது, அது நீங்களாகவும் கூட இருக்க வேண்டும். பாருங்கள், அந்த ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட வேண்டியதாயிருந்தது. நீங்கள் அவருடைய வஸ்திரத்தைத் தொட வேண்டியதாயிருந்தது. நாம் வெறும் கருவிகளாய் இருக்கிறோம். 223 நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது நீங்கள் அதை விசுவாசித்தால்…அதை விசுவாசிக்கிற எத்தனை பேர், இந்த விதமாக உங்களுடைய கரங்களை உயர்த்தி, “நான் அதை உண்மையாகவே விசுவாசிக்கிறேன்” என்று கூறுவீர்கள். 224 இப்பொழுது நீங்கள் அதை விசுவாசித்தால், இயேசு இதைக் கூறினார், “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்.” நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 225 இப்பொழுது காலதாமதமாகிவிட்டது. நமக்கு நேரமில்லை. இப்பொழுது பத்து மணிக்கு இருபத்தைந்து நிமிடங்கள் உள்ளன. அப்படியானால் நீங்கள் உங்களுடைய கரங்களை ஒருவர் மீது ஒருவர் வைப்பீர்களா? இப்பொழுது நான் உங்களுக்குக் கூறுகிறபடி அப்படியே செய்யுங்கள், உங்களுடைய கரங்களை ஒருவர் மீது ஒருவர் வையுங்கள். 226 இப்பொழுது நீங்கள் அறிவீர்கள், மாடியிலும் நீங்கள் இருக்கும் எல்லா இடங்களிலும். இப்பொழுது உங்களுக்குத் தெரியும், இப்போது எதையும் போலவே, வேதவாக்கியம் பிரசங்கிக்கப்பட்டு, கட்டிடம் முழுவதிலும் தெளிவாக அடையாளங்காட்டப்பட்டது. 227 நான் இப்பொழுது மற்றொன்றையும் காண்கிறேன். பார்த்தீர்களா? இங்குள்ள மற்றொருவர், சுரப்பிக் கோளாறோடும். காசநோயோடு உள்ள ஒரு பெண்மணியும் இருக்கிறாள். ஹூ-ஹூ. அது இப்பொழுது எங்கும் காணப்படுகிறது, ஆனால் அது உங்களைப் பலவீனப்படுத்துகிறது. 228 என்ன வித்தியாசம், இன்னும் என்ன? நீங்கள் ஐம்பதைக் காண்கிறீர்கள், சில சமயங்களில் அது உள்ளது, நீங்கள் அடுத்த முறை எழுபது என்பதைக் காண விரும்புகிறீர்கள். இயேசு ஒரு சமயம் சீகாரிலே அதைச் செய்தார், முழு நகரமும் அவர்மேல் விசுவாசம் கொண்டிருந்தது. அவர்கள் மேசியாவுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். 229 மேசியா இங்கே இருக்கிறார், பரிசுத்த ஆவியானவர், இந்த நாளின் மேசியா; மேசியா தம்முடைய வாக்குத்தத்தத்தின் வார்த்தை ரூபகாரப்படுத்தப்படச் செய்கிறார். 230 இப்பொழுது நீங்கள் விசுவாசிகளாயிருந்தால், நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய கரங்களை ஒருவர் மீது ஒருவர் வைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்பொழுது நீங்கள் உங்களுக்காக ஜெபிக்க வேண்டாம். நீங்கள் அந்த நபருக்காக ஜெபியுங்கள், அவர்கள் உங்களுக்காக ஜெபிக்கப் போகிறார்கள். இப்பொழுது, கடைசி நாட்களில் இதை வாக்குத்தத்தம் செய்த அதே வார்த்தை, மேலும்… 231 நினைவிருக்கட்டும், இயேசு, “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்” என்றார். அந்தச் சுகமளித்தல், திரும்பி வருதல், அடையாளம் கண்டு கொள்ளப்பட்டுள்ள சத்தமாய் உள்ளது. அவர்கள் ஒரு அடையாளமாக, வியாதியஸ்தர் மேல் கைகளை வைக்கிறார்கள்; “அல்லேலூயா, கர்த்தர் என்னைக் குணமாக்கிவிட்டார்!” என்ற சத்தம் உள்ளது. இப்பொழுது இந்த அடையாளங்கள் ஒரு சத்தத்துடன் வந்தால், அந்த அடையாளம், நீங்கள் ஒரு விசுவாசியாயிருந்தால், அது உடன் வரும். அந்தச் சத்தம் அந்த அடையாளத்தோடு வரும். 232 நான் உங்களுக்கு இந்த அடையாளத்தைக் கொடுத்தால், அது தேவனிடத்திலிருந்து வருகிறது என்று நான் உங்களுக்குக் கூறினது, தேவன் அதை இந்நாளில் வாக்குத்தத்தம் செய்துள்ளார்; ஒரு நாத்திகனைத் தவிர வேறொருவரும் அதை விசுவாசிக்காமல் இருக்க முடியாதபடிக்கு முழுமையாக விளக்கப்பட்டுள்ளது. பார்த்தீர்களா? அதன்பின்னர் தேவன் திரும்பி, அதை அவ்வண்ணமாக ஆக்க, அதை உறுதிப்படுத்தினார். இப்பொழுது அவர் இங்கிருக்கிறார். 233 இப்பொழுது ஒவ்வொருவரும், உங்களுடைய சொந்த சபையில் நீங்கள் ஜெபிக்கும் விதத்தில், அது உங்களுக்காக இருந்தால், சத்தமாக, அது எதுவாக இருந்தாலும், நீங்கள் உங்களுடைய கரங்களை வைத்துள்ள நபருக்காக நீங்கள் ஜெபியுங்கள், ஏனென்றால் அவர்கள் உங்களுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். 234 இப்பொழுது மேலே நோக்கிப் பாருங்கள். மேசியாவின் பிரசன்னத்தில், கிறிஸ்து, உயிர்த்தெழுந்த ஒருவர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் உயிரோடிருக்கையில், நாம் எப்படி ஆவியில் உணர்ச்சியற்றவர்களாய் இருக்க முடியும்? அது இந்தத் தேசத்தையே தீக்கிரையாக்க வேண்டும். அது பியூமாண்டை இரட்டுடுத்தி சாம்பலில் மனந்திரும்பச் செய்ய வேண்டும். ஆனால் அது அதைச் செய்யுமா? இல்லை. 235 ஆனால் அவரைத் தேடி, அவர் அதைச் செய்வார் என்றும், அவருடைய வார்த்தையைக் காத்துக்கொள்ளுவார் என்றும் விசுவாசிக்கிற நீங்கள், இப்பொழுது இது உங்களுக்குத்தான் வாக்குத்தத்தமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் இங்கிருந்து உங்களுக்காக ஜெபிக்கையில், உங்களுடைய கரங்களை யாரோ ஒருவர் மீது வைத்து ஜெபியுங்கள். 236 கர்த்தராகிய இயேசுவே, போதுமான அளவு கூறப்பட்டுள்ளது, போதுமான அளவு செய்யப்பட்டிருக்கிறது. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. மேசியா, தேவனுடைய கிறிஸ்து தெய்வீக பிரசன்னத்தில் இருக்கிறார். நாங்கள் அவரை உணருகிறோம். நாங்கள் அவரைக் காண்கிறோம். கடைசி நாட்களில் அவர் இதை வாக்குத்தத்தம் செய்தார் என்பதை நாங்கள் அறிவோம். “சோதோமின் நாட்களில் நடந்ததுபோல, மனுஷகுமாரன் வெளிப்படும்போதும் அப்படியே நடக்கும்.” அப்பொழுது, நாங்கள் அறிவோம். 237 நாங்கள் ஆகாயத்தில் நெருப்பு, அணுகுண்டுகளைக் காண்கிறோம். புழுக்கள் தின்ற நாடுகளை நாங்கள் காண்கிறோம், தேசங்கள் உடைந்து கொண்டிருக்கின்றன. இஸ்ரேல் தாயகத்தில் இருப்பதை நாங்கள் காண்கிறோம். வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருந்த ஒவ்வொரு அடையாளமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அடுத்த காரியம் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட குமாரன், வருகையாயிருக்கிறது. 238 ஓ நித்திய தேவனே, இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தில், இப்பொழுது இங்கிருக்கிற மகத்தான பரிசுத்த ஆவியானவர், அவர் இங்கிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தி, இந்த ஜனங்களின் ஜெபத்தைக் கேளும், இந்தக் கிறிஸ்தவர்களுக்குச் செவிகொடும்; அதாவது, நான் செல்லும்போது, அவர்கள், “சகோதரன் பிரான்ஹாம் இதைச் செய்தார்” என்று கூறமாட்டார்கள். அவர்கள் அறியாத வேறு யாரோ ஒருவர் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, அவர்கள் சுகமடைந்தனர். ஆனால் சத்தம் அதற்கு ஒரு அடையாளத்தை உடையதாயிருந்தது என்று நீர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறீர். இயேசுவின் நாமத்தில், நான் அவர்களை உம்மிடம் சமர்ப்பிக்கும்போது, அவர்கள் சுகமடைவார்களாக.